உங்கள் மனைவியை அன்பாய் வைத்திருக்க வேண்டுமா? |
நீங்கள் உங்கள் மனைவியை அன்பாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? இதோ உங்களுக்காக சில... * நீங்கள் வேலைக்கு செல்பவராக இருந்தாலும் சரி, தொழில் செய்பவராக இருந்தாலும் சரி, 2-3 மணி நேரங்களை மனைவியுடன் பேசுவதற்கு மட்டுமே செலவிடுங்கள். * வீட்டிற்கு வந்த உடன் டி.வி.யும், ரிமோட்டுமாக இருந்து விட வேண்டாம். மனைவியை அழைத்து அன்று வீட்டில் நடந்த விடயங்களை பற்றிக் கேளுங்கள். அரட்டை அடித்துப் பேசுங்கள். * உங்கள் குடும்பத்துக்கு தேவையான நல்ல விஷயங்களை ஆரோக்கியமாக விவாதியுங்கள். இந்த விவாதத்தில் உங்கள் குடும்ப பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வு கிடைக்கலாம். * பூக்கள் பிடிக்காத பெண்களே இருக்க முடியாது. அடிக்கடி அந்த பூக்களை உங்கள் அன்பான மனைவிக்கு வாங்கிக்கொடுத்து அசத்துங்கள். * உங்கள் மனைவியை எப்போதும் காதலியாகவே நினையுங்கள். ஒரு காதலன் காதலியிடம் எப்படி அன்பாக நடந்து கொள்வானோ, அதே போன்று நீங்களும் நடந்து கொள்ளுங்கள். இல்லையென்றால், முயற்சியாவது செய்யுங்கள். * உன்னுடைய ஆசைகள் எல்லாவற்றையும் நான் நிறைவேற்றி விட்டேனா? நிறைவேறாத ஆசைகள் என்று எதாவது இருந்தால் சொல். அதை நான் நிறைவேற்றுகிறேன் என்று அவ்வப்போது மனைவியிடம் சொல்லிப்பாருங்கள். நீங்கள் இப்படி கேட்ட மாத்திரத்திலேயே உள்ளம் குளிர்ந்து போவாள் உங்களவள். * மனைவி கஷ்டப்பட்டு சில வேலைகளை செய்யும்போது, அதில் நீங்களும் பங்கெடுத்துப் பாருங்கள். அந்த நேரம், அவள் மனதிற்குள் ஆனந்த மழைச்சாரலே பொழியும். மொத்தத்தில், நீங்கள் மனைவியிடம் எந்த அளவுக்கு அன்பாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அவளும் உங்களிடம் அன்பாக இருப்பாள் |
Sunday, January 30, 2011
Tuesday, January 25, 2011
பொசசிவ்
Wednesday, January 12, 2011
முத்தங் கக்கியே என்னைச் சாகடித்த
என் முத்தக் காட்டேரிக்கு..
.
கடித வழக்கப்படி நலம், நலமறிய ஆவல் என்று எழுதப்போவதில்லை.
நலக்குறைவு தான் காதலர்களின் உண்மையான நலம்.
அப்போது தான் புறங்கையில்
கழுத்தைத் தொட்டுப்பார்த்து
ஜுரம் குறைந்திருக்கிறதா? என்றும்
வயிற்றை அழுத்திப் பார்த்து
இப்போது வயிற்று வலி எப்படி இருக்கிறது? என்றும்
கேட்க முடியும்.
.
இருப்பினும்,
உன் சௌக்கியத்தின் சதவிகிதத்தில்
என் நலத்தை நான் அறிவேன்.
அது போல
உன் நாடித்துடிப்பில்
என் சௌக்கியத்தை நீயே சரிபார்த்துக்கொள்.
.
போன முறை நீ எனக்கு எழுதிய கடிதத்தில்
உன்னைச் செல்லமாக
எப்படிக் கூப்பிடுவது என்று கேட்டு எழுதியிருந்தாய்.
.
சூரியன், சூரியகாந்தியை
எந்த உறவுமுறையில் கூப்பிடும்..
சொல்ல முடியுமா உன்னால்?
.
சேவல், விடியலை
எந்த அடைமொழியில் கூப்பிடும்..
பதில் தெரியுமா உனக்கு?
.
என் கவிதைக்காரியே....
.
அருவி அலறித்தான்
யாரையம் கூப்பிடும்.
.
மரம் தலையாட்டித்தான்
அழைக்கும் எவரையம்.
.
அழைப்பதும் கூப்பிடுவதும்
அதனதன் வெளிப்பாடு.
.
பெயர் சொல்லி அழைப்பது
மனித நடைமுறையின் எதார்த்தம் என்றால்
பெயர் விடுத்து
வாய்க்கு வந்த வார்த்தைகளால்
கூப்பிடுவது அதீத அன்பின் அத்துமீறல்களே!
.
காற்று புகாத குழலில் இசையில்லை.
அத்து மீறாத அன்பில் காதலில்லை.
.
அளவுக்கு மீறிய அமுதத்தில் விஷம்.
அத்து மீறிய அன்பில் விஷமம்.
காதலில் விஷமம் அவசியம்.
அந்த விஷமங்களின் கால் பங்கை நிரப்புவது
இந்தச் செல்லப்பெயர்களே..
.
காதலில் மரியாதை என்பது
மடமை.
ஆகவே என்னை “மடையா“ என்று கூப்பிடு.
.
காதலில் கௌரவம் என்பது
கர்வம்.
ஆகவே என்னைப் “பொறுக்கி“ என்று கூப்பிடு.
.
சொந்தப் பெயரில் இல்லாத பெருமை
காதலி கூப்பிடும் பட்டப் பெயர்களில் இருக்கிறது.
.
பசுவின் தாய்மை
கன்றுக் குட்டியை நாவால் நக்கும்போது.
.
நாயின் நன்றி
வாலை ஆட்டிக் குழையும்போது.
.
காதலின் மகிமை
நீ என் தலையில் அடித்து
என்னை “முட்டாள்“ என்று திட்டும்போது.
.
உனக்குக் காதலன் என்ற முறையில்
உன் காதோடு ஒன்று சொல்கிறேன்.
உன் வாய்க்கு வந்த வார்த்தைகளாலெல்லாம் கூப்பிடு.
வாய்ப்புக் கிடைத்தால்
வரையறுக்கப்படாத வார்த்தைகளாலும்
என்னைக் கூப்பிடு.
.
எப்படி உன் உள்ளங்கை சிவக்கச் சிவக்க
மருதாணி உன்னைக் கூப்பிடுகிறதோ..
அப்படியே
உன் உதடுகள் சிவக்கச் சிவக்க
நீ என்னை
எப்படி வேண்டுமானாலும் கூப்பிட்டுக் கொண்டே இரு.
.
உனக்கொன்று தெரியுமா?
“டூ“ விட்டுக் கொள்ளாத நட்பும்
“டா“ போட்டுக் கூப்பிடாத காதலும் பாழ்
.
---
காதலிக்கிறேன்
என்ற இருமாப்புடன் நீ எனக்கு வைத்த
செல்லப் பெயர்களுடன்...
... உன் காதல்மிராண்டி.
.
.
(இந்தக் கடிதம் சுட்டது.
Sunday, January 9, 2011
True Love Story
வடிவேலுவோட காமெடிய கூட சீரியசா மூஞ்ச வெச்சுகிட்டு கோவமா பார்க்கற என் அப்பா,நீ பேசுன பேச்சுல விழுந்து விழுந்து சிரிச்சப்பதாண்ட உன்ன நான் நிமிர்ந்து பார்த்தேன்.ப்ளூ கலர் செக்டு ஷர்ட், ப்ளாக் கலர் ஜீன்ஸ் போட்டுகிட்டு என்ன பொண்ணு பார்க்க வந்துருந்த..ரொம்ப சுப்பர்லாம் இல்ல...பட்,நல்லா இருந்த...மறுபடியும் ஒரு தடவ நிமிர்ந்து பார்க்க வெக்கற அளவுக்கு...அப்ப நான் சத்தியமா நெனைக்கல,நமக்கு கல்யாணம் ஆகி ஏழு வருஷம் கழிச்சு உனக்கு நான் இப்டி ஒரு லவ் லெட்டர் எழுதுவேன்னு...
உலகத்துலேயே எனக்கு ரொம்ப புடிச்சது எங்க அப்பாவ...ஆனா,கல்யாணம் ஆகி ரெண்டே மாசத்துல எங்கப்பா பொறந்த நாள் கூட மறக்க வெச்சுடியேடா பாவி...நான் அடுத்த நாள் எங்கப்பாவுக்கு போன் பண்ணி எவ்ளோ அழுதேன் தெரியுமா..என்ன என்னமோ பண்ணிட்ட நீ... !
என்னோட காலேஜ் பிரண்ட்ஸ் எல்லாரையும் வெச்சுகிட்டு கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம நீ எங்கிட்ட ஐ லவ் யூ சொன்னப்ப எனக்கு வந்த கோவத்துக்கு உன் கழுத்த புடிச்சு உள்ள ரூமுக்குள்ள இழுத்துகிட்டு போய் கதவ சாதிக்கணும் போல இருந்துச்சு...எதுகுன்லாம் கேக்காத...
நம்ம ஹனி மூன் போனது,அங்க நீ எனக்கு தம் அடிக்க கத்து குடுத்தது..என்ன போட்டு பாடா படுத்தினது...என் பர்த்டே பிரசன்ட்னு நீ குடுத்த அந்த கிப்ட்..(அசிங்கம் புடிச்சவன்டா நீ..எப்டி அதெல்லாம் யோசிச்ச....!) உனக்கு மட்டும் எப்டி தோணுது .இப்டியெல்லாம் குறும்பு பண்ண... வாலு பயலே .இந்த ஏழு வருசத்துல என்னவெல்லாம் பண்ணிருக்க....
எங்கம்மா என்ன தொட்டு பேசுனா கூட எனக்கு புடிக்காது...பாவி பயலே..கல்யாணம் முடிஞ்சு மூணு மாசத்துல என்ன என்னேனல்லாம் பண்ண...அப்போல்லாம்,என்ன கண்ணாடில பார்க்க எனக்கே எவ்ளோ கூச்சமா இருந்துச்சு தெரியுமா...
எங்கப்பா என்ன பார்க்க ப்ளைட்ல வந்தப்போ,"ஒப்பன் வந்துட்டான் போல..இவ்ளோ நேரம் அழகா இருந்த ஏர்போர்ட் திடீர்னு சூனியம் புடிச்ச மாதிரி இருக்குனு சொல்லி என்ன நீ சிரிச்சுகிட்டே அழ வெச்சது..."உன்னால மட்டும் ஒரு நாளைக்கு 25 மணி நேரம் ஜோக் அடிக்க எப்டிடா முடியுது.. யார்கிட்டடா கத்துகிட்ட..இப்டி காமெடி பண்ணியே என்ன கவுக்கற வித்தைய....
எவ்ளோ தண்ணியடிச்சிட்டு மட்டையானாலும் என் அப்பாவ கிண்டல் பண்றப்ப மட்டும் உடனே தெளிவா பேசுறியே எப்டிடா அது...இனிமேவாச்சும், எங்கப்பாவ அவன் இவன்னு சொல்லாதடா ப்ளீஸ்..
நமக்கு குழந்த பொறந்தப்போ நீ உங்கம்மா கைய புடிச்சிகிட்டு தேம்பி தேம்பி அழுதியாமே...எங்க அத்த சொன்னங்க...அத கேட்டோன்ன, எனக்கும் அழுக வந்துடுச்சு தெரியுமா..என்ன உனக்கு அவ்ளோ புடிக்குமாடா...?
ம்..சொல்ல மறந்துட்டனே...நம்ம கல்யாணத்துக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி நீ எங்க வீட்டுக்கு வந்தப்போ,ஒரு கிஸ் குடுக்கறதுக்கு வேர்த்து விட்டு ,உளறி கொட்டி ,பயந்து நடுங்குன நீ,இப்ப எப்டியெல்லாம் மாறிட்ட..ராட்சஷா..(நீ அன்னிக்கு கிஸ் கொடுப்பேன்னு நான் எவ்ளோ எதிர்பார்த்தேன் தெரியுமா...நீ பாட்டுக்கும் பெரிய மயிர் மாதிரி நல்லவனாட்டம் போய்ட்ட...ச்சே,உன்னோட சேர்ந்து சேர்ந்து எனக்கும் கேட்ட வார்த்தையெல்லாம் வருது...)
உன்கிட்ட எனக்கு புடிக்காதது ஒன்னே ஒண்ணுதாண்டா..கோவம் வந்தா வெளில காமிக்காம உள்ளேயே வெச்சுக்கறது..இப்போ உன் மகளும் அப்டியேதான் பண்றா...உன்கூட ஒருதடவையாவது கண்ணா பின்னான்னு சண்ட போடணும்னு ரொம்ப ஆசையா இருக்கு...கொஞ்சம் கோவப்படேன்...
ஆனா உன் பொண்ணு வந்தோன்ன என்ன நீ முன்னாடி மாதிரி கவனிக்க மாட்ரடா..ஜாடமாடையா கேட்டா,இது நான் பெத்த பொண்ணு,கொஞ்சறேன்.எவன் பெத்த பொண்ணையோ நான் எதுக்கு கொஞ்சனும்னு நக்கல் வேற..அவ வர்றதுக்கு முன்னாடி தெரிலையா நான் எவன் பெத்த போன்னொன்னு... இரு என்னிக்காச்சும் கெஞ்சுவ அன்னிக்கு வெச்சுகறேன்..
ஆனா இதுவரைக்கும் யாரையும் நான் லவ் பண்ணதில்லன்னு நீ சொல்றததான் என்னால நம்பவே முடிலடா...நீ பேசுற பேச்சுக்கு கண்டிப்பா மாட்டிருபாளுகளே....
ஆமாம்,எப்போதுமே ஜோக் அடிச்சிட்டு இருக்கற நீ இப்பல்லாம் அப்டி இல்லையே ஏன்டா..ஒரு வேலை,நமக்கும் வயசாவுதோ...
உன்னோட வாழ்ந்த இந்த வாழ்க்கைய மறுபடியும் ஒரு தடவ வாழணும்னு ஆசையா இருக்குடா...முத்திக்குட்டி...ப்ளீஸ்டா...என்ன மறுபடியும் ஒரு தடவ பொண்ணு பார்க்க வர்றியா...
I love you-by Sainthavi.
எழுதுன லெட்டர மனசுக்குள்ள ஒரு தடவ படிச்சு பார்த்து சிரிச்சிட்டு ,பக்கத்துல அவன் பெத்த பொண்ண கட்டிபுடிச்சு தூங்கிட்டிருந்த சிபிய ஓரக்கண்ணால ரசிச்சிகிட்டே,எப்டி ரொமாண்டிக்கா இந்த லெட்டர இவன்ட்ட குடுக்கலாம்னு யோசிக்க ஆரம்பிச்சா சைந்தவி..மணி 3.47னு வெளில இருட்டுகிட்ட கடலை போட ஆரம்பிச்சது நிலா....
சைந்தவி புருசனோட பதில் காதல் கடிதம்...
முப்பது வருஷம் ஆச்சுடி முத்திகுட்டி...ஐ லவ் யு பை சைந்தவினு போட்டு உன்கிட்டேர்ந்து இந்த லெட்டர் வந்து..!
போன வாரம் நடந்த மாதிரி இருக்கு..அப்போ நமக்கு கல்யாணம் ஆகி ஒரு ஏழு எட்டு வருஷம் இருக்கும்னு நெனைக்கறேன்.. அன்னிக்கு அந்த லெட்டெர படிச்சிட்டு சிரிச்சிகிட்டே உன்ன கட்டிபுடிச்சு உன் காதுல ஏண்டி உங்கப்பன் சிரிக்கறப்ப லூஸ் மோகன் மாதிரியே இருக்கான்னு கேட்டு அப்பவும் உன்ன சிரிக்க வெச்சேன்...அன்னிக்கு தோணல...திரும்ப உன்கிட்ட ஐ லவ் யு சொல்லனும்னு...
ஏன் தோணலைன்னு தெரியல..நான் வார்த்தைல சொல்லித்தான் என் காதல் உனக்கு தெரியனுமாங்கர கர்வமா..இல்ல என்கூடவேதான இருக்கபோறா இவங்கர திமிரான்னு தெரில...ஆனா இன்னிக்கு தோணுது...உனக்கு பதில் எழுதனும்னு. அதுவும் உன் போட்டோவ பார்த்துகிட்டே எழுதனும்னு.. ..
மீ டூ சைந்தவி...நானும் உன்ன ரொம்ப லவ் பண்ணேன்...பண்றேன்...பண்ணுவேன்...
எல்லா ட்ரெஸ்ளையும் என் தங்கக்குட்டி ராசாத்தி மாதிரிதான் இருப்பான்னு நான் உன்கிட்ட சொல்ற எல்லா பொய்க்கும், அது பொய்ன்னு தெரிஞ்சும் வெக்கப்பட்டு சிரிப்பியே ஒரு சிரிப்பு..அதுக்கே உன்ன இன்னொருதடவ கட்டிக்கலாம்டி....
ஆக்சுவலா நாம கல்யாணத்துக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி நான் உங்க வீட்டுக்கு வந்தப்போ உன்ன இறுக்கி கட்டிபுடிச்சு உன் உதட்ட கடிக்கனும்போலதான் இருந்துச்சு...ஆனா நீ என்ன தப்பா நெனைச்சிடுவியோன்னுதான் ஒன்னும் செய்யாம வந்துட்டேன்..இப்ப உள்ள சைந்தவியா இருந்தா எனக்கு கரெக்டா தெரிஞ்சிருக்கும்...நீ மனசுக்குள்ள என்ன நெனைக்கறேன்னு...
நாம ஹனிமூன் போனப்போ நான் உனக்கு குடுத்த அந்த கிப்ட்...பயந்துகிட்டே குடுத்தேன் தெரியுமா...உனக்கு புடிக்குமோ புடிக்காதோன்னு...அத பிரிச்சு பார்த்துட்டு நீ விழுந்து விழுந்து சிரிச்சப்பதான் எனக்கு உயிரே வந்துச்சு...அப்போ தோனுச்சு..என் மிச்ச வாழ்க்கை சொர்க்கம்னு..லைப ரசிக்க தெரிஞ்ச பொண்டாட்டி கெடைச்ச எல்லாருக்கும் வாழ்க்கை சொர்க்கம்டி..
ஒருநாள் ராத்திரி ஓவர் மூட்ல நீ என்கிட்டே உலருனத எல்லாம் உனக்கு தெரியாம ரெகார்ட் பண்ணி உன் நம்பருக்கு ரிங் டோனா வெச்சுகிட்டதுக்கு ஏண்டி அன்னிக்கு அவ்ளோ அழுத...உனக்கு புடிக்காமத்தான் அழறபோலன்னு நெனைச்சுகிட்டு அவசரம் அவசரமா நான் அத டெலிட் பண்ணப்பரம் சொன்ன...ஐ லவ் யூன்னு..
பஸ்ல போகும்போது என் தோள்ள சாயிஞ்சிகரதுக்காக தூக்கம் வர்ற மாதிரி நடிக்கறது..டேய் நடிக்காதடி நீ தூங்கலைன்னு எனக்கு தெரியும்னு சொன்னா..அதெல்லாம் இல்ல,நான் தூங்கிக்கிட்டுதான் இருக்கேன்னு சொல்லி உங்கப்பன் முட்டாள்னு கன்பார்ம் பண்றது...
என் புருஷன் மீன் குழம்பு எப்டி வெப்பாரு தெரியுமான்னு நீ ஒரு கல்யாணத்துல உன் சொந்தகாரங்ககிட்ட பீத்திகிட்டப்போ மண்டபமே என்ன பார்த்து சிரிச்சிது...ஆனா நீ அவங்க ஏன் அப்டி சிரிக்கராங்கன்னு கூட தெரியாம பேந்த பேந்த என்ன பார்த்து பாவமா முழிச்சு என் மானத்த வாங்குனியே..ச்சே, ஆனா அன்னிக்கு நைட் உங்கப்பன கொஞ்சம் ஓவராதாண்டி உன்கிட்ட திட்டிட்டேன்..சாரி குட்டி..
எங்கப்பாவ கெட்ட வார்த்தைல திட்டாதடா ப்ளீஸ்னு இதுவரைக்கும் ஒரு முப்பதாயிரம் தடவ என்கிட்டே கெஞ்சிருப்ப..எனக்கே சில சமயம் பாவமாதான் இருக்கும் நீ கெஞ்சறத பார்த்தா...எனக்கும் அவன புடிக்கும்...நல்ல மனுஷன்...பாசமா இருப்பான் எல்லார்கிட்டயும்...ஆனா எனக்கு வேற வழி இல்ல... ஏன்னா உங்கப்பன திட்ட ஆரம்பிச்சாதான நீ என்ன பேச விடாம பண்றதுக்கு இருக்கமா கட்டிபுடிச்சு முத்தம் குடுத்துகிட்டே இருப்ப... பேசவிடாம உதட்டுலையே...
நீ நெறைய தடவ கேட்ருக்க...கல்யாணத்துக்கு முன்னாடி நீ யாரையும் நெஜமாவே லவ் பண்ணலையான்னு..பண்ணேன்..ஆனா அப்பவும் உன்னதான்டின்னு நான் சொன்ன உண்மைய நீ ஒருதடவ கூட நம்புனதே இல்ல..ப்ளீஸ் இப்பவாச்சும் நம்பு..நீ யாருன்னு தெரியறதுக்கு முன்னாடியே நான் உன்ன காதலிக்க ஆரம்பிச்சுட்டேன்...
நமக்கு குழந்த பொறந்தப்போ நான் அழக்கூடாதுன்னுதாண்டி நின்னுட்ருந்தேன்..ஆனா எங்கம்மாவ பார்த்தோன்ன அழுகை வந்துடுச்சு..ஏன்னே தெரில..
அன்னிக்கு நீ கஷ்டப்பட்டத பார்த்தப்போ தோணுச்சு..நீ இனிமே அழுகவே கூடாதுன்னு..சிரிச்சிகிட்டு மட்டுமே இருக்கணும்னு...இப்ப கூட நீ தூக்கத்துல சிரிக்கற..கனவுல கூட நாந்தான் வர்றேன் போல....
குழந்த பொறந்து மூணு மாசத்துல நான் ரூமுக்குள்ள வரும்போதெல்லாம் டேய் வேணாம்டா..ப்ளீஸ்டா...பாப்பு பாவம்டானு நீ கெஞ்சுனாலும் உன் கண்ணு கதவ சாத்த சொன்னது...
செக்ஸ்ல நான் உனக்கு கத்துகுடுத்தது, எனக்கு நீ கத்து குடுத்தது, நம்ம ரெண்டு பெரும் சேர்ந்து கத்துகிட்டது. எனக்கு புடிச்ச அந்த குட்டி மச்சம்..உன் வேர்வை வாசம்..சொருகி கெடக்குற உன் அழகு கண்ணு...எத சொல்ல.....யு ஆர் செக்ஸிடி.
உனக்கு குடுக்க வேண்டிய முத்தத்த எல்லாம் சேர்த்து நான் என் பொண்ணுக்கே குடுக்கறேன்னு நீ கம்ப்ளைன்ட் பண்ணிட்ருந்தப்போ நான் மறுபடியும் பாப்புக்கே முத்தம் குடுத்தத பார்த்து கடுப்பாகி அவகிட்ட எரிஞ்சு எரிஞ்சு விழுந்தத பார்த்து எனக்கு சிரிப்புதாண்டி வந்துது..நான்னா உனக்கு அவ்ளோ இஷ்டமா...
நீ என்ன கொஞ்சற செல்லபேர்லாம் சொல்லி நான் பாப்புவ கொஞ்சுனப்போ டேய் சொந்தமா யோசிடா..நான் உங்கிட்ட சொன்னத காப்பி அடிக்காதடானு சத்தமா சொல்லி என் அம்மா முன்னாடி என் மானத்த வாங்கினது...மாங்காபய மவடி நீ...
பாப்புவுக்கு ரெண்டு வயசு இருக்கும்போது அவகிட்ட சொல்லிக்குடுத்து உனக்கு ஐ லவ் யு சொல்லசொன்னப்போ உனக்கு சந்தோசமா இருந்தாலும் ஏன் நீனே சொன்னா என்னாவாம்னு கோவமா கேக்கற மாதிரி கெஞ்சுனது...
புக்ஸ் படிக்க புடிக்குமான்னு நான் கேட்டதுக்கு , உன்ன லவ் பண்ணவே எனக்கு டைம் பத்தல..இதுல நான் எங்கேந்துடா புக்ஸ் படிக்கனு நீ சொன்னப்போ முடிவு பண்ணேன்..நான் ப்ளாக் எழுதறத உன்கிட்ட சொல்லவே கூடாதுன்னு..
என்கிட்டே நீ சொன்ன ஏ ஜோக்ஸ்..வீம்புக்கு போட்டி போட்டு பீர் அடிச்சிட்டு பச்சை பச்சையா கெட்ட வார்த்தை பேசி உளறோ உளருனு விடிய விடிய உளறி என்ன விழுந்து விழுந்து சிரிக்க வெச்சது..
ஒரு நாள் நான் நெறைய தண்ணியடிச்சிட்டு வந்ததுக்கு கன்னாபின்னான்னு திட்டிட்டு நடு ராத்திரி எந்திரிச்சு எனக்கு முத்தம் குடுத்துட்டு என்னையே பார்த்துட்டு படுத்துருந்தியே ஏண்டி..செல்லத்த திட்டிட்டமேன்னா..உனக்கு ஒன்னு தெரியுமா நான் அப்போ முழிச்சிட்டுதான் இருந்தேன்..நாங்கல்லாம் ஒரு புல் அடிச்சிட்டு அசராம ஆத்திச்சூடி சொல்றவங்கேடி..அன்னிக்கு நான் அடிச்சிருந்தது வெறும் பீரு..ஆனா அடுத்த நாள் காலைல நீ வெரைப்பாவே கோவமா காமிச்சிகிட்டப்போ எனக்கு சிரிப்புதான் வந்துச்சு...நீ உங்கப்பன மாதிரியே கூமாங்குடி ....
எண்டா சாமி கும்புடமாட்டேங்கரன்னு நீ கேட்டப்போ நான் சாமியோடதான குடும்பம் நடத்தறேன்னு நான் சொன்ன பதிலுக்கு ஆரம்பிச்சிட்டான்டா ஜொள்ளு விடன்னு சொல்லிட்டு நீ சிரிச்சிட்டே போய்ட்ட..ஆனா, எனக்கு மட்டும்தான் தெரியும்..அந்த வார்த்தை எவ்ளோ உண்மைன்னு..
உங்கப்பா இறந்தப்போ நீ உங்கம்மா உன் தங்கச்சி எல்லாரையும் விட்டுட்டு என் மடில படுத்து எங்கப்பா இறந்துட்டாருடா...இனிமே நீ யார கிண்டல் பண்ணுவேன்னு கதறுனப்போ நான் கொஞ்சம் கலங்கிதாண்டி போயிட்டேன்..
பாப்புவ நீ அடிச்சிட்டேன்னு ஒருதடவ உன்கூட நான் ரெண்டு நாள் பேசாம இருந்தப்போ அன்னிக்கு நைட் என்ன கட்டிபுடிச்சு தேம்புனது..ஏண்டி அழறேன்னு கேட்டப்போ ஒண்ணுமே சொல்லாம தேம்பிகிட்டே இருந்தது...
பாப்பு கல்யாணம் ஆகி பாரின் போனப்போ ஏர்போர்ட்ல பாப்பு புருஷன் என்ன எதோ கிண்டல் பண்ணி பாப்புகிட்ட வம்பு பண்ணி சிரிச்சிற்றுந்தப்போ, நீ குழந்தயாட்டமா பலிப்பு காமிச்சு உங்களுக்கு நல்லா வேணும்..எங்கப்பாவ எவ்ளோ கிண்டல் பண்ணீங்கன்னு சிரிச்சப்போ..ஏன்னு தெரில..எனக்கும் சிரிப்புதான் வந்துச்சு..
அப்பா அப்பான்னு என்னையே சுத்திகிட்ருப்பா..இன்னையோட என்கிட்டே போன்ல பேசி நாலு நாள் ஆகுது..நீ உங்கப்பாவ மறந்தப்போ அவருக்கும் இப்டிதான வலிச்சிருக்கும்..பாவம்டி உங்கப்பா..பொம்பள புள்ளைங்ககிட்ட மட்டும் ரொம்ப பாசமே வெக்ககூடாதுடி...
உன்ன தவிர வேற யாரு இருந்திருந்தாலும் நானும் பாப்புவும் இவ்ளோ சந்தோசமா இருந்துருக்கமாட்டோம் குட்டி..
அடுத்த ஜென்மத்துலயும் நான் நானாவே பொறக்கணும்...சைந்தவிக்கு புருஷனா...நீ என் சைந்தவியாவே பொறக்கணும்...நான் மறுபடியும் உன்ன பொண்ணு பார்க்க வரணும்...மறுபடியும் நாம சந்தோசமா வாழனும்...இதுல எதுவும் மாறிடக்கூடாது...ஏன்னா சைந்தவியா பொறந்து தான் புருஷன சந்தோசமா மட்டுமே வெச்சுக்கறது எப்டீன்னு என் சைந்தவிக்கு மட்டும்தான் தெரியும்..
உங்கிட்ட ஒரு விசயத்த மறைச்சிட்டேன்...காலைலேர்ந்து எனக்கு லேசா நெஞ்சு வலிக்கற மாதிரியே இருக்குடி குட்டி..உன்கிட்ட சொன்னா பயப்படுவேன்னு சொல்லல..நான் போய் படுக்கறேன்..காலைல இந்த லெட்டெர படிச்சு பாரு...நீ எவ்ளவோ கெஞ்சி கேட்டும் நான் உங்கிட்ட இதுவரைக்கும் சண்டை போட்டதே இல்ல..ஆனா நாளைக்கு நீ ஆசைப்பட்ட மாதிரியே என்கிட்டே சண்டை போடுவேன்னு தோணுது..
என்ன எழுந்திரிக்க சொல்லி...!!
ஐ லவ் யு சைந்தவி...
சைந்தவி புருஷன்..