பிரிவு...!
வசியம் செய்த பேச்சுக்கள்
வசை மொழியாய் மாறியதென்ன !
என்னை கொஞ்சி அழைத்த குரல்
எடுத்தெறிந்து பேசும் விந்தையென்ன !
கொள்ளை அடித்த உன் புன்னகை
கொள்கை மாறிய அவலமென்ன !
கவிதை பாடிய விழிகளில்
கள்ளத்தனம் தெரிவதென்ன !
பொய்மை அறியா இதழ்களாம்
பொருத்தமாய் பொய் புனையும் ஜாலமென்ன !
அன்பிற்கு அர்த்தம் தெரியாத உன்னிடம்
அன்பை யாசித்து நின்ற என்னை
அர்த்தம் இல்லாதவளாகி விட்டாய் !
பயணப்படுகிறது தோல்வி நோக்கி
பக்குவமற்ற பருவக் காதல் !!
*************************************************
இனி என் காதல் செடிக்கு
தினம் லட்சார்ச்சனை
கண்ணீரால் !!
என் தலையணையும்
தினம் குளிக்கிறது
கண்ணீரால் !!
வாழ இயலாது நீ இன்றி
வாழ தெரியாது
நீ இருந்தும் இல்லாமல் !!
No comments:
Post a Comment