Pages

Search This Blog

Sunday, December 18, 2011

~படித்ததில் பிடித்தது~ - 2


நம்பிக்கை எனும் கண்கொண்டு பார்க்க வேண்டுமானால், பகுத்தறிவுக் கண்ணை மூடிக்கொள்ள வேண்டும்.- ப்ராங்க்ளின்

தன்னம்பிக்கை இல்லாதவர்களிடமிருந்து கடன் வாங்குங்கள். பணம் திரும்பக் கிடைக்கும் என்று அவர்கள் நம்புவதில்லை.


இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.- ஆலன் ஸ்டிரைக்


நாமனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் குறிக்கோளுடன் வாழ்கிறோம்; நம் வாழ்க்கைகள் எல்லாம் வேறுபட்டவை, இருப்பினும் ஒன்றே.- அணி பிரான்க்


பள்ளியில் பாடத்தை கற்றுக்கொண்டபின் பரீட்சை எழுதுகிறோம். ஆனால் வாழ்க்கையிலோ பரீட்சையின் பின்தான் பாடம் படிக்கிறோம்.


குடிசை வீட்டில இருகிறவன் ஏழையும் இல்லை, மடமாளிகையில இருக்கிறவன் பணக்காரனும் இல்லை, மன நிறைவோட இருக்கிறவன் தான் பணக்காரன்.............................


தண்டனை கொடுப்பதற்குத் தாமதம் செய்!, ஆனால், மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட செய்யாதே!- அன்னை தெரேசா


உன்னைப் பார்த்து ஒரு அழகான பொண்ணு சிரிச்சா என்னடா அர்த்தம்?
தெரியலியே!
உனக்குப் பின்னாடி நான் நிற்கிறேன்னு அர்த்தம்.


ஓவிய கண்காட்சிக்கு சென்றிருந்த ஜோ பக்கத்திலிருந்தவரிடம்,
ஜோ : “எப்படி பாத்தாலும் ஒண்ணும் புரியல. இது என்ன ஓவியம்?”
நபர் : “இது முகம் பார்க்கும் கண்ணாடி சார்”


நேசம் என்பது நினைக்கும் வரை...
பாசம் என்பது பழகும் வரை......
காதல் என்பது காதலிக்கும் வரை தான்.....


படிப்பதற்கு புத்தகத்தை விரித்ததும்
பக்கம் எல்லாம் உன் முகம்
என்னை பார்த்து சிரிக்கிறது .................

அழும் போது தனியாக அழு..!! சிரிக்கும் போது நண்பர்களோடு சிரி.!! ஏன் என்றால் இந்த உலகம் விசித்திரமானது கூட்டத்தோடு அழுதால் நடிப்பு என்பார்கள்.! தனியே சிரித்தால் பைத்தியம் என்பார்கள்.! புரிந்து கொள்ள முடியாத உலகம் நீயாவது புரிந்து கொள்.!!

பேசுவதற்கு வார்த்தைகள்

அதிகமாக இருந்தாலும்
பேச முடியாமல் தவிக்கும்
ஒரே இன்பமான துன்பம் தான்
காதல்...!

எனக்குத் தெரியும்,

நீ பொய்யாக கோபப்பட்டாய் என்று
ஆனால்
உனக்குத் தெரியுமா?
நான் மெய்யாக வருத்தப்பட்டேன் என்று....

No money No friends.......................... :{)

No comments: