Pages

Search This Blog

Sunday, December 18, 2011

~படித்ததில் பிடித்தது~ -4


காதலில் தோல்வி என்று நான் கவலை பட இல்லை, காரணம் உன்னை காதலித்ததே எனக்கு வெற்றிதான்

பிறர் முதுகுக்குப் பின்னால் நாம் செய்ய வேண்டிய வேலை "தட்டிக் கொடுப்பது மட்டும்தான்". - சுவாமி விவேகானந்தர்.


Tie கட்டி வாழ்வோரே வாழ்வார், மற்றேல்லாம் கை கட்டி அவர் முன் நிற்பார்!!!!" - என்ன உலகமடா இது!!!!!!

வீசி விட்ட‌ வாளினைப் போல்............பேசி விட்ட வார்த்தையடி!

தூசி பட்ட கண்களைப் போல்...............துடித்தது என் இதயமடி! -Hari-

வெற்றி பெறுபவர்கள் வித்தியாசமான பல செயல்களில் ஈடுபட மாட்டார்கள். ஆனால் ஒரு செயலை வித்தியாசமான முறையில் செய்வார்கள்.- சிவ் கெரோ


செய்ய முடிந்தவன் சாதிக்கிறான்; செய்ய முடியாதவன் போதிக்கிறான்.


பணத்தால் உணவை வாங்கலாம்; ஆனால் பசியை வாங்க முடியாது.பணத்தால் வேலையாட்களைப் பெறலாம்; ஆனால் விசுவாசத்தைப் பெற முடியாது.


சிறந்த மனிதனை அவனது சிறிய செயல்களை கொண்டு அறிந்து கொள், யாவராலும் பெரிய செயல்களை பல வேளைகளில் நன்றாகவே செய்ய முடியும்!

நீங்கள் ஈடுபடும் எந்த ஒரு செயலிலும் முழு விழிப்புணர்வோடு உங்கள் மனமும் செயலும் கலந்து ஒன்றி இருந்தால் அதுதான் உண்மையான தியானம்!- ஓஷோ ரஜனீஷ்
நீ விரட்டி வரும் போது நான் விலகிச் சென்றது, உன் மீதிருந்த வெறுப்பால் அல்ல... என் மீது உனக்கு இருந்த விருப்பால், நீ உன் வாழ்கையின் லட்சியத்தை எட்டத் தவறி விடுவாயோ என்ற அச்சத்தால் தான்...!!

எனக்கு ஒரு -சின்னஞ்சிறு ஆசை அது உன் கண்களுக்குள் நான் குடியிருக்கவேண்டும்.........! நீ கண்மூடி துயிலும்போது -நான் உன் கண்னுக்குள் -உலா வரவேண்டும்......! எனக்கு ஒரு சின்னஞ்சிறு ஆசை உன் இதயதில் நான் குடியிருக
இதயத்தை கல்லாக மாற்றிவிட்டு
நீ என்னோடு பேசிய
அந்ந கடைசி நிமிடங்களை
நினைத்து பார்த்தால்
இப்போதும் கண்களில்
...இரத்தம் வருகிறது…...


"நீயும் நானும் சந்தித்துக் கொள்ளும் ஒரு நொடிப் பொழுதும் இருவருக்கும் சங்கடங்களை ஏற்படுத்தும் என்பதால்
தற்சமயமாக நிகழ்கின்ற எந்த விபத்திலும் கூட நீயும் நானும் சந்திக்காமலே போய்விடக் கூடாதா?"
என்று சொல்லிக் கொண்டேன் நிலவுக்கு.

விற்ற பொருளின் முகவரியை

வாங்கும் பணத்திற்கு தெரியாது!
கற்ற கல்வியின் பெறுமதியை
தூங்கும் பிணமது அறியாது!
பெற்ற நட்பின் வெகுமதியை
...பேரம் பேசிட முடியாது!
உற்ற காதலின் தருமதியோ
உலகை வைப்பினும் குறையாது!-Ha RI-

பிறக்கும் போது “தாயை” அழவைக்கிறோம், இறக்கும் போது "அனைவரையும்” அழவைக்கிறோம், So இருக்கும் போதாவது பிறரை சிரிக்க வைப்போம்.........................


நாம் நாளை உயிருடன் இருப்போம் என இரவில் தூங்குவதும் நம்பிக்கை, நாட்களோடு நகரும் நம் நண்பர்கள் மீது வைப்பதும் நம்பிக்கை, இவைகள் தங்கியிருப்பது எமது செயற்கை. ..! பொதுவில் இது இயற்கை...!!!!!

~படித்ததில் பிடித்தது~ 3


மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி ஆகின்றான்.- சுவாமி விவேகானந்தர்

மற்றவர்களை ஏமாற்றி பிழைப்பவன் ஒருநாள் நிச்சயம் வருந்துவான். எச்சந்தர்பத்திலும் நேர்மை தவறாதவன் நிச்சயம் வாழ்வில் உயர்வான்.


ஒரு பாதி கதவு நான்... மறு பாதி கதவு நீ... பார்த்துக்கொண்டே பிரிகின்றோம்...... மறுபடியும் சேர்வதற்காய்!! ~ நா. முத்துக்குமார்

இன்னுமொரு முறை சாதாரண மனிதனாக வாழ்ந்து மறைய நான் விரும்பவில்லை. அறிவுச் சுரங்கத்தின் கதவுகளைத் திறந்தவன் என்று அனைவரின் நினைவிலும் நிற்கவே நான் விரும்புகிறேன்.- ஸ்டீபன் ஹாக்கிங்

மற்றவர்களால் கடுமையாக விமர்சிக்க படுகிறாயா... கவலை கொள்ளாதே உன் முன்னேற்றத்தை நோக்கி நீ சென்று கொண்டிருக்கிறாய்!

கடவுள் ஒரு நாள் உனது உயர்ந்த இலட்சியங்களை நிச்சயம் நிறைவேற்றுவார்...:ஆனால் உன் ஆசைகளின் வழியில் அல்ல!

அம்மாவிடம் பாசத்தையும்அப்பாவிடம் நேசத்தையும் இன்றே உணர்த்துங்கள் சில நாளைகள் அவர்கள் அருகில் இல்லாமலும் போகலாம்......................!!!!!!!!!

கல்யாண சந்தை இது ஒரு வினோதமான சந்தை எல்லாப் பொருட்களையும் பணத்துக்காக விற்பார்கள் இங்கு மட்டும் பெண் என்ற உயிர்ப் பொருள் ஒன்று பணம் கொடுத்து விற்கப் படும்............


சொல்ல மறந்த கதையை விட சொல்லாமல் மறைத்த கதையை அதிகம்
புரிந்து கொள்ள வேண்டிய உன் மனமோ புரிந்து கொள்ள வில்லை
புரிய வைக்க என் மனதுக்கோ தெரியவில்லை ..........

ஒருவரும் குறை கூறாமல் உன் காரியங்களைச் செய்ய வேண்டுமென்றால், நீ என்றைக்கும் ஒன்றுமே செய்ய முடியாது. - கர்டினல் நியூமான்


"நீ யாருக்காக வாழ்கிறாயோ"... அவர்களுக்காக

சிலவற்றை விட்டு கொடு!."உனக்காக யார் வாழ்கிறார்களோ" அவர்களை யாருக்காகவும்
விட்டுக்கொடுத்து விடாதே!!!!!!!!!!!!!!!!!!!!!

என் உயிர் உள்ளவரை
உணர்வுகள் உயிரோடு உள்ளவரை
என் நினைவுகளிலிருந்து
தூக்கி எறியப்படதவன்
நீ .............................

உன்னை மட்டும் சந்தித்திரா விட்டால் காதலின் சுவை என்னவென்று அறியாமலே என் ஆயுள் முடிந்து இருக்கும்..........


Cute PrOpOsal- BOy: hey I’ve GOt 2 WOrds TO Say Yu!
Girl:what?
BOy: I LOVE U
Girl:huh- Isn’t Dat 3 WOrds?
BOy: nO! ♥ BcOs Yu & I Are One ♥

Don't b sad when u choose a wrong move, bcoz everybody commit

mistakes. Itz da primary reason y a pencil is alwys created vth
eraser.

~படித்ததில் பிடித்தது~ - 2


நம்பிக்கை எனும் கண்கொண்டு பார்க்க வேண்டுமானால், பகுத்தறிவுக் கண்ணை மூடிக்கொள்ள வேண்டும்.- ப்ராங்க்ளின்

தன்னம்பிக்கை இல்லாதவர்களிடமிருந்து கடன் வாங்குங்கள். பணம் திரும்பக் கிடைக்கும் என்று அவர்கள் நம்புவதில்லை.


இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.- ஆலன் ஸ்டிரைக்


நாமனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் குறிக்கோளுடன் வாழ்கிறோம்; நம் வாழ்க்கைகள் எல்லாம் வேறுபட்டவை, இருப்பினும் ஒன்றே.- அணி பிரான்க்


பள்ளியில் பாடத்தை கற்றுக்கொண்டபின் பரீட்சை எழுதுகிறோம். ஆனால் வாழ்க்கையிலோ பரீட்சையின் பின்தான் பாடம் படிக்கிறோம்.


குடிசை வீட்டில இருகிறவன் ஏழையும் இல்லை, மடமாளிகையில இருக்கிறவன் பணக்காரனும் இல்லை, மன நிறைவோட இருக்கிறவன் தான் பணக்காரன்.............................


தண்டனை கொடுப்பதற்குத் தாமதம் செய்!, ஆனால், மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட செய்யாதே!- அன்னை தெரேசா


உன்னைப் பார்த்து ஒரு அழகான பொண்ணு சிரிச்சா என்னடா அர்த்தம்?
தெரியலியே!
உனக்குப் பின்னாடி நான் நிற்கிறேன்னு அர்த்தம்.


ஓவிய கண்காட்சிக்கு சென்றிருந்த ஜோ பக்கத்திலிருந்தவரிடம்,
ஜோ : “எப்படி பாத்தாலும் ஒண்ணும் புரியல. இது என்ன ஓவியம்?”
நபர் : “இது முகம் பார்க்கும் கண்ணாடி சார்”


நேசம் என்பது நினைக்கும் வரை...
பாசம் என்பது பழகும் வரை......
காதல் என்பது காதலிக்கும் வரை தான்.....


படிப்பதற்கு புத்தகத்தை விரித்ததும்
பக்கம் எல்லாம் உன் முகம்
என்னை பார்த்து சிரிக்கிறது .................

அழும் போது தனியாக அழு..!! சிரிக்கும் போது நண்பர்களோடு சிரி.!! ஏன் என்றால் இந்த உலகம் விசித்திரமானது கூட்டத்தோடு அழுதால் நடிப்பு என்பார்கள்.! தனியே சிரித்தால் பைத்தியம் என்பார்கள்.! புரிந்து கொள்ள முடியாத உலகம் நீயாவது புரிந்து கொள்.!!

பேசுவதற்கு வார்த்தைகள்

அதிகமாக இருந்தாலும்
பேச முடியாமல் தவிக்கும்
ஒரே இன்பமான துன்பம் தான்
காதல்...!

எனக்குத் தெரியும்,

நீ பொய்யாக கோபப்பட்டாய் என்று
ஆனால்
உனக்குத் தெரியுமா?
நான் மெய்யாக வருத்தப்பட்டேன் என்று....

No money No friends.......................... :{)

~படித்ததில் பிடித்தது~ -1

உனக்கு காதலி கிடைக்கவில்லை என்று கவலைப்படாதே.. அது உன் வருங்கால மனைவியின் வேண்டுதலாகக்கூட இருக்கலாம்.


உன் எதிரி யார் என்று சொல் நான் உன்னை பற்றி சொல்கிறேன் (U tel me ur enemy's name, i ll tel about u ) -Carl Marks


விழிகளில் துன்பம் வந்த போது தான் தெரிந்தது , கண்ணீரை துடைக்க ஒரு கையும் இல்லை என்று ... தன் கையே தனக்குதவி ..........:(



அருகிருக்கும் போது அருமை தெரியாது... தூரம் போனால் தான் எல்லாம் புரியும்....



ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்-என் ஒரு கவிதையை நீ படி போதும் அது சொல்லிவிடும் என் மொத்த காதலையும்....



வாழ்வின் ஒவ்வொரு கணமும் அதிசயமும் மர்மமும் நிறைந்தது என்பதை கடிகாரமும் நாட்காட்டியும் எமது கண்ணில் இருந்து மறைத்துவிட நாம் அனுமதிக்கக்கூடாது.- எச். ஜி. வெல்ஸ்



பிரச்சனைகளை தீர்க்க பழகிக்கொள்... வாழ்வதற்கே வாழ்க்கையென்பதை புரிந்துகொள்...!



யூத்துக்கு ரிஸ்க்கு எடுக்கிறது ரஸ்க் சாப்பிடறது மாதிரி..ஆனா ஓல்டுக்கு ரஸ்க் சாப்பிடுறதே ரிஸ்க் எடுக்கிற மாதிரி தான்!



பாஸ் என்கிற பாஸ்கரன் சந்தானம் ஸ்டைலில் படிக்கவும்;ஊர்ல Bsc,Bcom,M,sc ன்னு ரெண்டு மூணு பட்டம் வெச்சிருக்கிறவன் எல்லாம் சந்தோசமா சுத்திகினு இருக்கான்.BEன்னு ஒரு பட்டம் வெச்சுகிட்டு நான் படுற அவஸ்தை இருக்கேஅய்யய்யாயாயோயோ..................


உண்மையான காதலை புரிந்து கொள்ள ஒரு ...சந்தர்ப்பம் !!
பிரிவு !!


பிரியமுள்ள நெஞ்சங்கள் பிரிவை தாங்குவதில்லை,
நேசமுள்ள நெஞ்சங்கள் நேசிக்க மறப்பதில்லை.... Every one have to FLOWE this....!!!

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதம்...........

வாழ்க்கை பாதையில் எத்தனை பேர், அத்தனை பேரையும் சமாளிப்பது (அனுசரிப்பது ) ஒரு விதம்........... (to those who can understand)


ஆயிரம் சொந்தம் நம்மை தேடி வரும் ,
ஆனால் தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம்
நல்ல நண்பர்கள்
Don't Miss !!


இன்னுமொரு முறை சாதாரண மனிதனாக வாழ்ந்து மறைய நான் விரும்பவில்லை. அறிவுச் சுரங்கத்தின் கதவுகளைத் திறந்தவன் என்று அனைவரின் நினைவிலும் நிற்கவே நான் விரும்புகிறேன். - ஸ்டீபன் ஹாக்கிங்



Facebookல அற்புதம் -ஆண் profileல பெண் வைதிருக்கிராங்க, பெண் profileல ஆண் வைதிருக்கிராங்க...... கொடுமை -ஆண் profileல இன்னுமோர் ஆண் வைதிருக்கிராங்க, பெண் profileல இன்னுமோர் பெண் வைதிருக்கிராங்க......

Monday, October 17, 2011

மனம் எளிதில் உடைகிறதா!

மனம் எளிதில் உடைகிறதா!


உங்கள் மனதை மற்றவர்கள் எளிதில் உடைத்து விடுகிறார்களா? தினமும் யாரோ ஒருவரால் கவலையை சுமந்து திரிகிறீர்களா? அடிக்கடி வருத்தங்களையும், அவமானங்களையும் சந்திக்கிறீர்களா? எதையும் சந்திக்க வேண்டிய திட மனது உங்களிடம் இல்லையா? அப்படியென்றால் உங்களைப் பற்றி சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்

எதிலும் உறுதியான பிடிப்பு இல்லை, உங்களுக்கென்று சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை, அனேக அவமானங்களையும், ஏமாற்றங்களையும் அதிகமாக சந்திக்கிறீர்கள், மனம் வெறுமையாக கிடக்கிறது அதில் எதை வைத்து அனுபவிப்பது என்றே தெரியவில்லை, யாரும் உங்களை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை, என்னடா வாழ்க்கை, நான் சபிக்கப்பட்டவன், சாபம் நிறைந்து வாழ்கிறேன் என்ன செய்வதென்றே தெரியவில்லை
இதுதான் உங்கள் ஜாதகம் உங்களை பற்றி நீங்கள் இப்படிதான் நினைக்கிறீர்கள், தன்னை பற்றிய தாழ்வான எண்ணங்களே மனபலஹீனத்திற்கு முக்கிய காரணமாகும். வாழ்க்கையில் நடக்கும் ஒரு நடைமுறை உண்மை உங்களுக்கு தெரியுமா! கஸ்ட்டப் படுகிறவனைதான் திரும்பவும் கஸ்ட்டங்கள் வந்து ஒட்டிக் கொள்ளும், ஏனைன்றால் அவன் தன்னை தரித்திரன் என்றே எண்ணி விடுகிறான், அவன் எண்ணங்களே தவறாமல் மீண்டும் துன்பத்தை அள்ளி கொடுத்து விடுகிறது.
நீங்களும் அறியாத குழந்தையாக இருந்தபோதே நடந்த சின்ன சம்பவங்களை அழுகையாக, சோகமாக நினைத்து பிஞ்சிலேயே ஒடிந்து விழுந்து கிடக்கிறீர்கள் மீண்டும் நிமிர்ந்து கொள்ளாமல், திரும்ப திரும்ப நான் பாவ பிறவி என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள், உங்கள் எண்ணப்படியே நீங்களும் தவறாமல் பாவப்பிறவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இப்போது நீங்கள் புதிய எண்ணங்களை விதையுங்கள், சபிக்கப்பட்டவன் என்ற எண்ணத்தை புரட்டிப் போட்டு அதன் மறுபுறத்தில் ஏறி உட்க்காருங்கள்.
பிறக்கும் எல்லா குழந்தைகளும் ஒரே மனத்திடத்தோடு பிறப்பதில்லை, சிறு பிள்ளைகள் பள்ளிக்கு செல்வதை கவனியுங்கள் இரண்டு மூன்று பிள்ளைகள் ஒன்றாக கூடி பேசிக்கொண்டே போவார்கள் ஒரு குழந்தை மட்டும் அவர்களோடு ஒட்டாமல் சற்று விலகிச் செல்லும், சின்னவர், பெரியவர் என்றில்லாமல், ஒவ்வொருவரின் குணாதிசயமும் வேறு வேறாகவே இருக்கிறது, எனவே நான் மட்டும்தான் இப்படி என்று நினைக்காதீர்கள், இல்லாத திடத்தை நிச்சயம் வளர்த்துக் கொள்ள முடியும்.
ஐயோ என்ன வாழ்க்கை இது என்று கதறி கொண்டிருப்பவர்களைப் பார்த்து இவர்களும் நம்மை போன்றவர்கள்தான் என்று துணைக்கு அவர்ளை ஒட்டிக் கொள்ளாதீர்கள், சிறிது சிறிதாக மகிழ்ச்சியான, தைரியமான சூழலுக்கு, புதுமையான எண்ணங்களுக்கு உங்களை பழக்கிக் கொள்ளுங்கள், மாற்றங்கள் நிறைந்த சூழலுங்கு உங்கள் மூளையை பழக்கி விடுங்கள், மூளையானது நெகிழ்வு தன்மையுடையது நீங்கள் விரும்பும் சூழலுக்கு அதை தயார் படுத்தி வைக்க முயும்.
உங்கள் பலஹீனங்களை பார்த்து யாரேனும் உங்களை அவர்கள் சுயநலத்திற்காக பயன்படுத்தக்கூடும், அடிமைப் படுத்தி வைக்க கூடும், இன்னும் அந்த அடிமைத்தனத்தை தொடராதீர்கள் அவைகளை மறுத்து விடுங்கள், முதலில் உங்களை வெறுப்பார்கள், வெறுக்கட்டும், முதலில் கெட்ட பெயர்தான் கிடைக்கும், கிடைக்கட்டும், சில நாட்களுக்கு பிறகு அவனா! அவன் அப்படிதான் என்று உங்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும்.
எனவே வேண்டாத தாழ்வான எண்ணங்களை தொலைத்து, எதையும் எதிர்கொள்ள வேண்டிய தைரியத்தை வளர்த்து மனதை உறுதியாக நிலைநிறுத்தி வையுங்கள், கவலைகளை மறந்து, துணிவான எண்ணங்களை வளர்க்க ஆரம்பித்தீர்களானால், இதுவரை பட்ட வேதனைகளும், அவமானங்களும் மீண்டும் சோதனையை ஏற்படுத்தாமல், உறுதியை, தைரியத்தை, துணிச்சலையே கற்றுத்தரும் வாழ்க்கையை துணிச்சலுடன் எதிர்கொள்ளுங்கள்

Wednesday, September 7, 2011

ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?





”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அதுவே திரும்பத் திரும்ப ஒலி/ஒளிப்பதிவுகளாக நம் உள்ளத்தில் திரும்பத் திரும்ப வந்து நம்மைப் பாடாகப் படுத்துவதுண்டு. அப்படி நம் மனதில் ஆறாத காயமாகி, நாம் மறக்க நினைக்கும் விஷயங்களில் முதலிடம் பெற்று நிற்பது நமக்கு இழைக்கப்படும் அநீதிகள் தான்.

ஒரு முறை ஹைதராபாத்தில் நடைபெற்ற சுவாமி சுகபோதானந்தாவின் வாழ்வியல் பயிற்சி முகாமில் பங்கு பெற்றவர்களிடம் சுகபோதானந்தா ஒரு கேள்வியைக் கேட்டார். “உங்கள் மனதில் நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் காயம் என்ன?”

பலரும் தங்கள் மனதில் இருந்த ஆறாத காயங்களைப் பற்றி சொன்னார்கள். கிட்டத்தட்ட எல்லாமே அடுத்தவர்கள் இழைத்த அநியாயங்களாகத் தான் இருந்தன. ஒருவர் தன் அரசாங்க வேலையில் இருந்து ராஜினாமா செய்து தன் சேமிப்பையும், மனைவி குழந்தைகள் நகைகளை விற்று வந்த தொகையையும் முதலாகப் போட்டு நண்பருடன் செய்த வியாபாரத்தைப் பற்றி சொன்னார். நண்பரை நம்பி வியாபாரத்தின் எல்லா உரிமைகளையும் நண்பர் பெயரிலேயே வைத்திருந்ததால் வெற்றிகரமாக நடந்து வந்த வியாபாரத்தில் ஒரு கட்டத்தில் ’உனக்கு இனி சம்பளம் மட்டும் தான்’ என்று சொல்லி நண்பர் ஏமாற்றி வெளியேற்றிய அநியாயத்தைச் சொல்லி அழுதார். இன்னொரு பெண்மணி தன் புகுந்த வீட்டில் தனக்கிழைத்த நியாயமற்ற கொடுமைகளைச் சொல்லி மனம் குமுறினார்.

இப்படி பலரும் பல காயங்களைச் சொல்ல அதைக் கேட்டுக் கொண்ட சுவாமி சுகபோதானந்தா அடுத்தபடியாக அவர்களிடம் “உங்களுக்குப் பிடிக்காத போர் அடிக்கும் சினிமா ஒன்றின் பெயர் சொல்லுங்களேன்” என்றார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு சினிமாவின் பெயரைச் சொன்னார்கள்.

“சரி. அந்த சினிமாவின் வீடியோ காஸெட்டை (சி.டி, டி.வி.டி எல்லாம் வர ஆரம்பிக்காத காலகட்டம் அது) தேடிப் பிடித்து வாங்கி, வருகிற ஞாயிற்றுக் கிழமை காலையிலிருந்து இரவு வரை திரும்பத் திரும்ப போட்டுப் பாருங்கள்” என்றார்.

ஒரு முறை பார்த்தே வாழ்க்கை வெறுத்தவர்களுக்கு அதை விடப் பெரிய கொடுமை என்ன இருக்க முடியும்? அவர்கள் “ஐயையோ...முடியவே முடியாது. முடிகிற காரியமாக வேறு எதையாவது சொல்லுங்கள்” என்றார்கள்.

“நண்பன் உங்களுக்குச் செய்த துரோகமும், மாமியார் செய்த கொடுமைகளும் கூட உங்களுக்குப் பிடிக்காத காட்சிகள் தான். பிறகு ஏன் அதை உங்கள் மனத்திரையில் மீண்டும் மீண்டும் ஓட்டிப் பார்க்கிறீர்கள்? பிடிக்காத சினிமாவைப் பார்க்க மறுக்கும் நீங்கள், விரும்பாத அந்த உண்மைக் காட்சிகளை ஏன் உங்கள் மனத்திரையில் மீண்டும் மீண்டும் ஓட விட்டுப் பார்க்கிறீர்கள். அதை மறந்து விடுங்கள். காயம் தானாகவே காய்ந்து உதிர்ந்து விடும்” என்றார் சுகபோதானந்தா.

அவருடைய அழகிய வார்த்தைகளில் “கடந்த காலம் நமக்குப் பாடமாக இருக்க வேண்டுமேயொழிய பாரமாக இருக்க ஒருபோதும் நாம் அனுமதிக்கக் கூடாது”

இது அறிவுபூர்வமாக எல்லோருக்கும் புரியக் கூடிய நல்ல விஷயம். ஆனால் மனம் அறிவின் படியா நடக்கிறது? எதை நினைக்கக் கூடாது என்று கட்டளை இடுகிறோமோ அதைப் பற்றியே அல்லவா மனம் பிடிவாதமாக நினைக்கிறது. இந்த காயங்கள் ஒவ்வொரு முறை நினைக்கும் போது புதிய காயம் போலல்லவா வலிக்கிறது. இந்த காயங்களை ஆற வைப்பதெப்படி? மறப்பதெப்படி?

இது சாத்தியமாக வேண்டுமானால் இரண்டு மாபெரும் உண்மைகளை நினைவில் இருத்த வேண்டும்.

ஒன்று எந்த அநியாயமும் தண்டிக்கப் படாமல் போவதில்லை. சில தண்டனைகள் உடனடியாகக் கிடைக்காமல் போகலாம். ஆனால் கர்மபலன் என்பது காலம் கழிந்தாவது வட்டியும் முதலுமாகக் கிடைக்கக் கூடியதே. அது சில சமயங்களில் நம் கண்ணிற்குப் படாமல் இருக்கலாம், கருத்திற்கு எட்டாமல் இருக்கலாம். ஆனால் வினை விதைத்தவன் வினை அறுக்காமல் போனதாக சரித்திரம் இல்லை. ஹிந்தியில் ஒரு அழகான பழமொழி உண்டு. ’இறைவனின் பிரம்படியில் சத்தம் கேட்பதில்லை’. இது நூற்றுக்கு நூறு உண்மை. வெளியே தெரியாமல் தனக்குள்ளேயே புழுங்கும்படியான எத்தனையோ வேதனைகள் உண்டு. எனவே வெளித் தோற்றத்தை வைத்து எதையும் எடை போடுவது சரியானதாக இருக்காது.

எனக்குத் தெரிந்த ஒரு பெரிய செல்வந்தர் பல அப்பாவி ஏழை ஊழியர்களை ஏமாற்றி, அவர்களுக்கு சேரவிருந்த பணத்தைத் தராமல் ஏமாற்றியவர். அவருக்குப் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகள் உண்டு. அவர் அப்படி ஏமாற்றியவர் என்றாலும் அவருடைய செல்வச் செழிப்பில் ஒரு குறையும் கடைசி வரை இருக்கவில்லை. அவர் கடைசியாக விற்ற சொத்து ஒன்று எதிர்பாராத நல்ல விலைக்குப் போய் அவர் இலாபத்தை பல மடங்கு ஈட்டித் தந்தது. இதையெல்லாம் பார்க்கையில் ’ஏமாற்றிய ஆள் நன்றாகத் தானே இருக்கிறார். அவருக்குப் பணம் சேர்ந்து கொண்டே தானே இருக்கிறது’ என்று யாருக்குமே தோன்றுவது இயற்கை.

ஆனால் அந்த மனிதரின் பங்களாவையும், சொத்து மதிப்பையும் பார்ப்பதை விட்டு விட்டு அவர் வீட்டுக்குள் நுழைந்து பார்த்தால் உண்மை விளங்கும். அந்த மனிதர் வீட்டில் குடும்பத்தினருக்கு அவர் மீது சிறிதும் மதிப்பில்லை, பாசமுமில்லை. அவருடைய மனைவி மற்றவர்கள் முன்னிலையிலேயே அவரை இழிவாகப் பேசுவதுண்டு. அவருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் அவரிடமிருந்து அதிகமான சொத்தை அவர் இருக்கும் போதே எழுதி வாங்கி விட வேண்டும் என்று சதா அவரை நச்சரிப்பதும், சண்டை போடுவதும் வாடிக்கை. அந்த மனிதர் வாய் விட்டுச் சிரித்தோ, நிம்மதியாக சில மணி நேரமாவது இருந்தோ யாரும் பார்த்ததில்லை. வயதான காலத்தில் இதை விடப் பெரிய தண்டனை வேறென்ன இருக்க முடியும் சொல்லுங்கள்.

’அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப தவறிழைத்தவர் தண்டனை பெறாமல் தப்புவதில்லை என்றறிந்து தெளியும் போது காயத்தின் தீவிரம் குறையும்.

இரண்டாவது உண்மை நமக்கு ஏற்படும் கசப்பான அனுபவங்கள் எதுவுமே காரணம் இல்லாமல் வருவதில்லை. அவை நாம் நம் முந்தைய செயல்களால் சம்பாதித்தவையாக இருக்கலாம், நம்முடைய குறைபாடுகளால் நாம் வரவழைத்தவையாக இருக்கலாம், அல்லது நாம் புடம் போட்ட தங்கமாக மாறத் தேவையான அனுபவங்களாக இருக்கலாம். இதை ஒத்துக் கொள்ள நமக்கு சிறிது கஷ்டமாக இருக்கலாம். ஆனால் இது மாபெரும் உண்மை.
இதற்கு நாமே காரணம், அல்லது நம் பக்குவத்தினை அதிகப்படுத்த கிடைத்த பாடம் இது என்று உணரும் போது ஒரு அனுபவத்தின் கசப்புத் தன்மை குறைகிறது. தெளிதலும், மறந்து முன்னேறுவதும் சாத்தியமாகிறது.

இந்த உண்மைகளை மனதில் இருத்திக் கொண்டு சுவாமி சுகபோதானந்தா சொன்னதையும் சிந்தித்துப் பாருங்கள். நமது ஆறாத காயங்களின் வலியும், நமது பொருமல்களும் நம்மைக் காயப்படுத்தியவர்களை எந்த விதத்திலும் பாதித்து விடுவதில்லை. மாறாக நம் மகிழ்ச்சியைத் தான் குலைத்து விடுகிறது என்பதையும் மறந்து விடாதீர்கள். உண்மையாகவே இதெல்லாம் புரியும் போது அது வரை ஆறாத காயங்களும் ஆற ஆரம்பிக்கும்.

Friday, September 2, 2011

பணக்காரர் ஆக பாபிலோன் சொன்ன 7 டிப்ஸ்!




டிஸ்கி : அது நடிகை பாபிலோனா அல்ல, பாபிலோன் நாடு..நன்றாகப் படிக்கவும்.

சிறுவயதில் பள்ளிப்பாடத்தில் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்று பாபிலோனின் தொங்கும் தோட்டம் என்று படித்திருப்பீர்கள்.(மீண்டும் டிஸ்கியைப் படிக்கவும்). அப்படிப் புகழ்பெற்ற பாபிலோனின் மன்னர் சார்கன் மக்கள் மேல் அக்கறை கொண்டவர்.

தன் மக்களில் ஒரு சிலர் மட்டும் பணக்காரர் ஆகிக்கொண்டே போக பலரும் ஏழையாக இருப்பது ஏன் என்று கவலை கொண்டார் மன்னர். மந்திரியை அழைத்து ஏன் இப்படி நடக்கிறதென்று கேட்டார்.

அதற்கு மந்திரி “ஒருவேளை அந்த சிலருக்கு மட்டும் எப்படி பணக்காரர் ஆவதென்ற வித்தை தெரிந்திருக்கலாம். அப்படித் தெரிந்துகொண்டு சிலர் முன்னேறுவதைத் தவறென்று சொல்ல முடியாதே?” என்று கேட்டார்.

“நீர் சொல்வதும் சரி தான்..ஆனால் அந்த ரகசியம் தெரிந்தவர் ஏன் அதை தெரியாதோருக்கும் சொல்லக்கூடாது அமைச்சரே?..யார் இந்த பாபிலோனின் பெரும் பணக்காரர்?” என்றார் மன்னர்.

”ஆர்கட் தான்..கடும் வறுமையுடன் இளம்வயதில் கஷ்டப்பட்டவன். இப்போது நம் நாட்டிலேயே அவன் தான் பணக்காரன். அவனை நாம் கேட்கலாம் “ என்று மந்திரி சொன்னதை மன்னரும் ஆமோதித்தார்.

அரசவைக்கு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டான் ஆர்கட். மக்களும் அங்கே குழுமினர். மன்னரே விஷயத்தை எடுத்துச் சொன்னார்.

“ஆகவே ஆர்கட், ஏழையாக இருந்த நீ எப்படி பணக்காரன் ஆனாய் என்று மக்களுக்குச் சொல். அவர்களும் அவ்வாறே செய்து முன்னேறட்டும்” என்றார் மன்னர்.

ஆர்கட் பேச ஆரம்பித்தான் :

எனது இளம்பருவத்தில் நான் மிகவும் ஏழையாக இருந்தேன். காலியான பர்ஸும், பணக்காரன் ஆகவேண்டுமென்ற தீராத ஆசையுமே என்னிடம் அப்போது இருந்தது. எனது மெலிந்து நலிந்து போயிருந்த என் பர்ஸை பெருக்க வைக்க என்ன வழிகள் என்று தீவிரமாக யோசித்தேன். ஏழு ஸ்டெப்ஸைக் கண்டு பிடித்தேன். அதை இங்கே சொல்கிறேன், கேளுங்கள்.

1. பர்ஸைப் பருக்க வையுங்கள் :

’பர்ஸ் என்ன நமீதாவா..பெருக்க வைக்க?’ என்று விதண்டாவாதம் பேசினால் உருப்படவே மாட்டீர்கள், கடைசி வரை கேர் ஆஃப் ப்ளாட்ஃபார்ம் ஆகவே இருக்க நேரிடும். எனவே நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். நீங்கள் மாதா மாதம் சம்பளம் வாங்கும்ப்போது, உங்கள் பர்ஸ் தடிமனாக இருக்கிறது. நாளாக நாளாக அனைத்துப் பணமும் காலியாகி பர்ஸ் மெலிந்து விடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக பர்ஸை குண்டாக்குங்கள்.


அதற்கான எளிய வழி, நீங்கள் சம்பாதிப்பதில் 10%-ஐ எக்காரணம் கொண்டும் செலவளிக்க எடுக்காதீர்கள். அது பர்ஸிலேயே இருக்கட்டும்.(சரிய்யா..பேங்குலயே இருக்கட்டும்)

நீங்கள் மாதம் பத்தாயிரம் சம்பாதிப்பவராக இருந்தால்கூட, எக்காரணம் கொண்டும் 1000 ரூபாயை வெளியே எடுத்துவிடாதீர்கள். அது உங்கள் பணம் அல்ல, உங்கள் எதிர்காலத்தின் பணம் என்று ஞாபகம் வையுங்கள். அவ்வாறு உங்கள் பேங்க் பேலன்ஸ் ஏறஏற, பணக்காரர் ஆவது பற்றி பாசிடிவ்வாக உணர ஆரம்பிப்பீர்கள்.
2. செலவைக் குறைங்கப்பா :

’சம்பாதிக்கிறதுல 10%ஆ..சான்ஸே இல்லை’ என்று நீங்கள் புலம்புவது கேட்கிறது. ’மனமிருந்தால் மார்க்கம் உண்டு..மணமானால் மாப்பிள்ளை குண்டு ‘ என்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள் அல்லவா?


உங்கள் மாதாந்திரச் செலவுகளை எக்ஸெல்லிலோ, நோட்டிலோ எழுதி வையுங்கள். ஒவ்வொரு ரூபாயும் எந்த வழியில் செலவாகிறது என்று குறித்து வாருங்கள். கொஞ்ச நாட்களில் உங்களுக்கே தெரியும், எந்தச் செலவைச் சுருக்கினால் இந்த 10% சேமிப்பை செய்ய முடியும் என்று.

சம்பாத்தியத்தில் 10% எடுத்து வைத்துவிட்டு, மீதியில் மட்டுமே குடும்பத்தை ஓட்டுவோம் என்று உறுதி கொண்டீர்கள் என்றால், பணக்காரர் ஆவதின் இரண்டாவது படியை வெற்றிகரமாகக் கடந்துவிட்டீர்கள் என்றே அர்த்தம்.

3. பணத்தைப் பெருக வையுங்கள்:

’இப்பத்தான் பர்சைப் பெருக்க வையின்னான்..அடுத்து பணத்தையுமா.பணத்தை எப்படி,,’-ன்னு நீங்கள் விவகாரமாக யோசிப்பது புரிகிறது. இப்போது உறுதியுடன் நீங்கள் 10% -ஐ சேமித்து வருவது பாராட்டத்தக்கது. ஆனால் அந்தப் பணத்தை வெறுமனே பேங்கிலோ வீட்டிலோ வைத்தால் என்ன ஆகும்?

பண வீக்கம் என்ற அரக்கனைப் பற்றித் தெரியும் இல்லையா? செங்கோவி சொன்ன பயங்கரமான பீரோ உதாரணம் ஞாபகம் இருக்கிறது, இல்லையா?

எனவே அந்தப் பணத்தை பணவீக்கத்திற்கு எதிராக, உங்களுக்கு ஆதரவாக உழைக்க விடுங்கள். பணவீக்கம் வருடத்திற்கு 7% என்றால், உங்கள் பணம் இண்ட்ரஸ்ட்டாக சம்பாதிப்பது 7 %க்கு மேல் இருக்க வேண்டும். இல்லையென்றால், அது தன் மதிப்பை இழந்து கொண்டே போகும். எனவே 7%க்கு மேல் அதிக வருமானம் எங்கே கிடைக்கும் என்று பார்த்து முதலீடு செய்யுங்கள்.


நீங்கள் பணத்திற்காக வேலை செய்வது போலவே, பணம் உங்களுக்காக வேலை செய்யட்டும்.

4. சேமிப்பை இழப்பில் இருந்து காப்பாற்றுங்கள் :

இப்போது அடுத்த முக்கியமான ஸ்டெப்..பணவீக்கத்துக்குப் பயந்து 50% வட்டி தர்ற டுபாக்கூர் ஃபைனான்ஸ் கம்பெனிங்ககிட்ட உங்க பணத்தைக் கொடுத்தா என்ன ஆகும்? தலையில் துண்டு தான் இல்லையா? எனவே எங்கே உங்கள் முதல் பாதுகாப்பாக இருக்குமோ, அங்கே முதலீடு செய்யுங்கள்.

எந்தச் சூழ்நிலையிலும் முதலுக்கு மோசம் வராத இடமாகப் பார்த்து முதலீடு செய்யுங்கள். அது நீங்கள் கஷ்டப்பட்டுச் சேமித்த பணம். நாம் அவ்வாறு கஷ்டப்பட்டது அவற்றை இழப்பதற்கு அல்ல. எனவே தங்கத்தில் முதலீடு செய்ய சரியான நேரம் வரும்போது, தங்கம் வாங்குங்கள். நிலத்தில், அரசுப்பத்திரங்களில், பங்குச்சந்தையில் என உங்களுக்குச் சரியான இடம் பார்த்து முதலீடு செய்யுங்கள். அறிந்தோரிடம் ஆலோசனை கேளுங்கள்.

5. பணம் சம்பாதிக்கட்டும் பணத்தை! :

இவ்வாறு உங்கள் சேமிப்பு சரியான இடத்தில் உங்களுக்காக உழைத்து சம்பாதித்துக்கொடுக்கும். இப்போது என்ன செய்வீர்கள்? உடனே பீட்ஸாவும் புடவையும் வாங்கி, எஞ்சாய் செய்தீர்கள் என்றால், கவுண்டர் செந்தில் முகத்தில் முழித்த மாதிரி ஊஊ தான்!

உங்கள் பணம் சம்பாதித்த பணத்தை மீண்டும் முதலீட்டிலேயே போடுங்கள். வீடு வாங்கி வாடகைக்கு விட்டதால் வரும் பணம் என்றால் வாடகையைச் செலவழிக்காமல் வங்கியில்போடுங்கள். வங்கியில் இருந்து வட்டி வருகிறதென்றால், அதைத் தங்கத்தில் முதலீடு செய்யுங்கள். அந்தப் பணம், உங்கள் முதலீட்டு முறைகளில் ஒன்றுக்கே திரும்பச் செல்லட்டும்.

அது உழைப்பில் பிறந்த, உழைக்கப் பிறந்த பணம். அதை ஸ்வாஹா செய்யாமல் உழைக்க விடுங்கள்.

6. காப்பீடு செய்யுங்கள் :

சம்பாதிப்போர் பெரும்பாலானோர் செய்யும் தவறு இன்சூரன்ஸ் திட்டங்கள் எதிலும் சேராமல் இருப்பது. உங்களையும், உங்கள் முதலீட்டையும் காப்பீடு செய்யுங்கள். செலவுகள் அதிகரித்துக்கொண்டே போகும் இக்காலத்தில், உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்திற்காவும் மருத்துவம் உள்ளிட்ட காப்பீடுகளை இப்போதே எடுத்து வையுங்கள். எதிர்பாராத நேரத்தில் அது உதவும்.

7. உங்கள் சம்பாதிக்கும் திறனைக் கூட்டுங்கள் :

இந்த மாதிரி நம் பணம் நமக்காக உழைக்க ஆரம்பித்தவுடன், பலரும் செய்யும் தவறு சந்தோசத்தில் தனது சம்பாத்தியத்தைப் பெருக்குவதில் கோட்டை விடுவது தான். பணத்திற்குப் போட்டியாக நீங்களும் உழைக்க வேண்டிய நேரம் இது. பலநாள் போராடி, செலவுகளைக் குறைத்து செல்வந்தர் ஆக ஒரு வழியினை உருவாக்கி விட்டீர்கள்.

இன்னும் 10%-ஐ தனியே ஒதுக்கிக்கொண்டே இருக்கின்றீர்கள். உங்கள் சம்பளம் கூடக்கூட அந்த 10% தொகையும் கூடும், அதன் மூலம் முதலீடும் கூடும் ,அதன்மூலம் நம் வருங்காலத்திற்கான செல்வமும் கூடும்.

எனவே சொகுசு கண்டு, சோம்பி விடாதீர்கள். Rich Dad-Poor Dad புகழ் ராபர்ட் கியோசாகி ஒரு முறை சொன்னது போல் பணக்காரர் ஆவது நீண்ட நாள் எடுக்கும், போரடிக்கும் பயணம்.

ஆனால் அதுவே பாதுகாப்பானது.

ஆர்கட் தன் பேச்சினை முடித்துக்கொண்டு சொன்னான் : உலகில் நீங்கள் கனவு காண்பதை விடவும் அதிக செல்வம் கொட்டிக்கிடக்கிறது. இப்போதே நான் சொன்னபடி திட்டமிட்டு உழைக்க ஆரம்பியுங்கள். முன்னேறுங்கள், செல்வந்தர் ஆகுங்கள். அது உங்கள் உரிமை!

என்ன பாஸ், இந்த 7 ஸ்டெப்ஸை யூஸ் பண்ணி முன்னேற நீங்களும் ரெடியா?

Thursday, September 1, 2011

மங்காத்தா அதிரடி ஆட்டம் – விமர்சனம்


Mankatha review

அஜித்தின் ஐம்பதாவது படம் தான் இந்த மங்காத்தா. தொடர் தோல்விகளால் ஒரு வெற்றியை கொடுத்தே தீர வேண்டிய சூழ்நிலை. அதற்காக வழக்கம் போல் இந்த படத்துல ஹீரோ ஊரையோ அல்லது நாட்டையோ காப்பாத்த கிளம்பல. பணம், பெண் என்று பித்து பிடித்து அலையும் ஒரு நெகடிவ் கதாபாத்திரம். “Strictly No Rules” என்று அஜித் வெற்றி பெறவேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் அனைத்து விதிகளையும் உடைத்து மங்காத்தா விளையாடி அதில் ஜெயித்தும் இருக்கிறார் வெங்கட் பிரபு.

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் சூதாட்டத்தில் ஈடுபடுத்தப்படும் ஐநூறு கோடி ருபாய் பணத்தை தன் வசாமாக்க திட்டம் போட்கிறார் ஜெயப்ரகாஷ். அதை கொள்ளை அடிக்க புறப்படுகிறது வைபவ், பிரேம் ஜி என்று நால்வர் கொண்ட கும்பல். இதை தெரிந்துக்கொண்டு அவர்களிடம் ஐந்தாவதாக சேர்கிறார் விநாயக் என்ற சஸ்பென்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரியான அஜித்.

அந்த ஐந்து பேரும் திட்டம் போட்டவாறு ஐநூறு கோடியையும் கொள்ளையடித்து விடுகின்றனர் ஆனால் அதை பங்கிட்டு கொள்வதில் தான் பிரச்சனை. பணத்தாசை காரணமாக அனைவரையும் கொன்று அதை ஒரே பங்காக சுருட்ட நினைக்கிறார் அஜித். ஆனால் பணம் அவருக்கே கிடைக்காமல் காணாமல் போகிறது. அதை தேடி தான் மீதி கதை.. இந்த கும்பலை தேடிபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக அர்ஜுன். கூடவே எதிர்பாராத க்ளைமாக்ஸ்.

“எவ்வளவு நாள் தான் நல்லவனாவே நடிக்கிறது”னு படத்தோட ட்ரைலர்லேயே கதையை சொல்லிட்டாங்க. அஜித் முதற்கொண்டு படத்தில் வரும் அனைவருமே கெட்டவர்கள் தான்.இவராவது நல்லவராக வராரேனு ஒருத்தரை நினைத்தால் அட அவரும் கடைசியில கெட்டவர் தான். அந்த ஐந்து பேரில் அஜீத்திற்கு மட்டும் முக்கியம் கொடுக்காமல் அவரும் அதில் ஒருவராகவே காண்பித்து கதையை நகர்த்தியது அருமை. அதே போல் பணம் காணாமல் போகும் போது அதை யார் எடுத்திருப்பார்கள் என்று அந்த கதாபாதிரங்களுக்கு எழும் குழப்பங்களும், கேள்விகளும் நமக்கும் எழாமல் இல்லை.

mankatha trisha lakshmi rai

அஜீத்தின் இது நாள் வரைய எல்லா படங்களையும் சில நொடிகள் ஒரே காட்சியில் ஓட விட்டு “அஜித் 50” என்று படம் தொடங்கும்போதே அதிரடி. விசில் பறக்கிறது. அடுத்த மே மாதம் வந்தால் தனக்கு நாற்பது வயது என்ற கூறி நரைத்த முடியுடன் இந்த படத்தில் அஜித் கொஞ்சம் அசத்தலாக வருகிறார். முதல் பாதியில் தனியாக செஸ் விளையாடி கதையை நரெட் செய்யும்போது பின் பாதியில் பணத்தின் மேல் தனக்கு உள்ள பைத்தியத்தை வெளிபடுத்தும் காட்சிகளிலும் மிகச்சிறந்த பர்பார்மென்ஸ்.

இந்த படத்துக்கு அஜித் வாய்க்குள்ளேயே சென்சார் போர்டு உறுப்பினர்கள் ஒக்காந்து இருந்தாங்க போல. அவர் வாயை திறந்தார்னாலே வெறும் பீப்… பீப்.. சத்தம் தான். அவ்வளவு மோசமான கெட்ட வார்த்தைகள். உதட்டசைவில் அதை புரிந்து கொள்கிறவர்கள் கைதட்டி ஆற்பரிக்கிரார்கள். புரியாதவர்கள் எரிச்சலுடன் முழிக்கிறார்கள். படத்தில் திரிஷா, ஆண்ட்ரியா மற்றும் அஞ்சலி இருந்தும் படத்திற்கு தேவை இல்லாத கதாபாத்திரங்கள். ஆனால் லட்சுமிராய் கொஞ்சம் பயன்ப்பட்டு இருக்கிறார்.

அஜித் திரிஷா காதலே இந்த கதைக்கு தேவையில்லாத போது அவர் அதற்கு அழுவதும், ஒரு சோக பாட்டும் நம் பொறுமையை சோதிக்கிறது. சோக பாடல் ஆரமித்தபோது எங்கே இன்னும் யுவன் சங்கர் ராஜாவை காணோமே என்று யோசிக்க ஆரமித்த போது கரெக்டாக வந்து அட்டென்டன்ஸ் போட்டு விட்டார். ஆனால் இரண்டு குத்து பாடல்களை தவிர வேறு ஏதும் இதில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. வழக்கம் போல் பின்னனி இசை கலக்கல்.

ajith-premji-vaibhav-veer-mankatha-still

வெங்கட் பிரபுவின் படத்தில் வழக்கம் போல் வரும் அத்தனை சகாக்களும் இந்த படத்திலும். இளைஞர்களை டார்கெட் செய்யும் வசனங்கள் மூலம் நிறைய காட்சிகளில் கைதட்டல்கள் பெறுகிறார். ஒரு பாடலில், அஜித் மற்றும் த்ரிஷா நடனமாட, வீட்டின் உட்புறங்கள் தொடர்ந்து மாறிக்கொண்டே வருவது மிகவும் புதுமையான, ரசிக்கும்படியான முயற்சி. வழக்கம் போல் பிரேம்ஜி இந்த படத்திலும் மற்ற திரைப்படங்களின் வசனம் பேசியே வருகிறார். அவ்வப்போது எரிச்சல் ஊட்டினாலும் பல இடங்களில் டைமிங் வசனத்தால் சிரிக்க வைக்கிறார். உதரணமாக “மனுஷன் கண்டு புடிச்சதுல உருப்படியானது ரெண்டே ரெண்டு தான்.. ஒன்னு சரக்கு… இன்னொன்னு முறுக்கு.” என்று சொல்லும்போது அரங்கமே கைதட்டலில் அதிர்கிறது.

படம் முடிந்து என்டு கார்டு ஓடும்போது அஜித் செய்யும் லூட்டிகள் கொஞ்ச நஞ்சமில்லை. அதில் தனியாக ஒரு நகைச்சுவை குறும்படம் பார்த்த அனுபவம் இருந்தது. மொத்தத்தில் இது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு ஜாலியான பொழுதுபோக்கு படம். அஜித் ரசிகர்களுக்கு இது நிச்சயம் கொண்டாட வேண்டிய பட

Friday, February 4, 2011

பிரிவு...!

சியம் செய்த பேச்சுக்கள்
சை மொழியாய் மாறியதென்ன !

ன்னை கொஞ்சி அழைத்த குரல்
டுத்தெறிந்து பேசும் விந்தையென்ன !

கொள்ளை அடித்த உன் புன்னகை
கொள்கை மாறிய அவலமென்ன !

விதை பாடிய விழிகளில்
ள்ளத்தனம் தெரிவதென்ன !

பொய்மை அறியா இதழ்களாம்
பொருத்தமாய் பொய் புனையும் ஜாலமென்ன !

ன்பிற்கு அர்த்தம் தெரியாத உன்னிடம்
ன்பை யாசித்து நின்ற என்னை
ர்த்தம் இல்லாதவளாகி விட்டாய் !

யணப்படுகிறது தோல்வி நோக்கி
க்குவமற்ற பருவக் காதல் !!

*************************************************


இனி என் காதல் செடிக்கு
தினம் லட்சார்ச்சனை
கண்ணீரால் !!


என் தலையணையும்
தினம் குளிக்கிறது
கண்ணீரால் !!


வாழ இயலாது நீ இன்றி
வாழ தெரியாது
நீ இருந்தும் இல்லாமல் !!

Thursday, February 3, 2011

சந்தேகமெனும் பேய்...


என்ன மாதவன் பைல் வேலை முடிஞ்சதா நாளை கடைசி நாள் என உயர் அதிகாரி கேட்க ஐயோ சார் வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டேன் என மாதவன் கூறினான் .
சார் வேலை முடிஞ்சுது இதோ வீட்டில் போய் எடுத்து வந்து விடுகிறேன்.
பரவாயில்லை மாதவன் நாளை வேலைக்கு வரும்போது எடுத்துவாருங்கள்.
சார் பேங்கில பணம் போட போறேன்,அப்படியே எடுத்து வந்து
விடுகிறேன் .
மாதவன் பேங்கில பணத்தை போட்டு விட்டு வீட்டுக்கு விரைந்தான் .வீட்டு வாசலில் மனைவியின் ஸ்கூட்டி வண்டி நின்றது .என்னடா இது, நம்ம கூடதான் அவள் ஆபிசுக்கு கிளம்பினாள்,பின்ன எப்படி வீட்டில் வண்டி நிக்குது.
அவள் போன் கூட பண்ணலியே உடம்பு எதும் சரியில்லியோ என பல சிந்தனையோடு வீட்டில் நுழைய முற்பட வீட்டினுள் இருவர் பேசும் குரல் கேட்டது .அதுவும் ஆடவன் குரல்.சரி எதும் உறவினன் யாரும் வந்திருப்பானோ, அப்படின்னா போனில் சொல்லி இருப்பாளே ,கதவு வேற உள்ளே தாழ்ப்பாள் போட்டுள்ளதே என குழப்பத்தோடு என்ன செய்வது என திகைத்து நின்றான் .
சரி மனதை திடப்படுத்தி கொண்டு என்ன என்று ஜன்னல் வழி பார்த்து விடுவோம், என பார்த்தவனுக்கு ஒரே அதிர்ச்சி புதிய ஆடவனோடு நான் வாங்கிகொடுத்த கருப்பு கலர் நைட்டியை போட்டு கிட்டு அவனை கட்டியபடி "சே" என்ன கொடுமை அதன் என் வாயால எப்படி சொல்ல அவள் திரும்பி என்னை பார்க்கும் முன் இங்கிருந்து சென்றுவிடுவோம் என புறப்பட எத்தனித்தான் . அவனோ அவளிடம் டார்லிங் இதுக்காக எத்தனை தருணம் காத்திருந்தேன் தெரியுமா என கொஞ்சும் குரலில் கூற அவளும் ..ம்.. என்க
கொடுமை என தலையில் அடித்த படி மாதவன் பைலை எடுக்காமல் ஆபிஸ் சென்று விட்டான்.
ஆபீசில் அவனுக்கு இருப்புகொள்ளவில்லை.என்ன செய்வது எப்படி கேட்பது என மனதில் பல போராட்டங்கள்.வேலை செய்ய மனதே இல்லாமல் மனம் போன போக்கில் நடந்தான் .மாலை நான்கு மணிக்கு வீட்டிற்க்கு வந்தான்.
மனைவி குளித்து விட்டு தலையை துவட்டியபடி வந்தாள்.என்னங்க ஆள் டல்லா இருக்கீங்க .காப்பி எடுத்து வரவா.அப்பப்பா என்னா வெயிலுங்க ஆபிஸ் விட்டு வருதுக்குள்ள போதும் போதும்னு இருக்கு,சரி நீங்க கை கால் கழிவிட்டு வாங்க என கிச்சன் பக்கம் விரைந்தாள்.
என்னா பேசுவது எப்படி கேட்பது என பாத்ரூம் சென்றான் மாதவன். வெளியே அவன் காலையில் பார்த்த கறுப்பு நைட்டி துவைத்து கொடியில் தொங்கியது.அடிபாவி இப்படி நடிக்கிறாளே என வெம்பியபடி உள்ளே வந்தான்.
மனைவியை பார்த்து நான் ஒண்ணு கேட்கனும் கேட்கட்டுமா கண்ணு
என்றான் மாதவன்.
இல்லைங்க அதுக்கு முன்னாடி நான் ஒண்ணு உங்ககிட்ட சொல்லணும் சொல்லுட்டுங்களா.
அதை வேற உன் வாயால கேட்கணுமா என மனதில் நினைத்தபடி சரி சொல்லு
என்றான்
ஏங்க என் ப்ரண்ட் கலா தெரியுமில்ல,
"ஆமா தெரியும் அதுக்கென்ன"
அவளும் அவள் கணவனும் என் ஆபிஸ் வந்திருந்தாங்க.அவள் கூட்டு குடும்பத்தில் வசிக்கிறாள்.அவள் கணவன் துபாய் போகிறாராம்.இரண்டு வருடம் கழித்து தான் வருவாராம்.மாலை நான்கு மணிக்கு தான் பிளைட்டாம். தன்னோட ஆசையை மறைமுகமாக சொன்னாள்.அதனால் நம்மவீட்டில் கொஞ்சம் நேரம் தங்கிட்டு அப்புறமா போறோம் என்றாள் அதான் நான் என் வண்டியை கொடுத்து நம்ம வீட்டிற்கு அனுப்பி வைத்தேன் .புதுசா கல்யாணம் ஆனவள் தானே அப்படி இப்படி இருப்பாங்க.அது கூட்டு குடும்பத்தில முடியாது .மாற்று துணியும் கொண்டுவர முடியாது .அவங்க வீட்டில் இது எதற்கு என கேட்பாங்க .அதனால நான் என் துணியை யூஸ் பண்ணிக்க சொன்னேன்.இந்த விஷயம் உங்களுக்கும் தெரியனுங்கிறதுக்காக தான் சொல்றேன்.எதையும் உங்ககிட்ட இதுவரை மூடி மறைத்ததில்லை.உங்ககிட்ட கேட்காம சரின்னுட்டேன் மன்னிச்சிடுங்க என அவள் பேசும் போதே என்னை யாரோ கன்னத்தில் பளார் என அறைந்த மாதிரி இருந்தது ."சே" நானெல்லாம் ஒரு மனுஷன்,கட்டிய மனைவியை இப்படி சந்தேக பட்டுவிட்டேனே என கூனிகுறுகி விட்டான் மாதவன்.என்னங்க நான் பேசிட்டே இருக்கேன் அப்படி என்ன யோசனை ,சரி ஏதோ சொல்லனும்னு சொன்னீங்களே என்னன்னு சொல்லுங்க.
"ம்" என்ன டார்லிங் என சுதாரித்து அதெல்லாம் எதுக்கு கண்ணு சாயிந்திரமா கோயிலுக்கு போலாமா என கேட்க வந்தேன் நீ என்னடான்னா ஊர்கதை பேசிட்டு இருக்கே என மழுப்பினான்.சந்தேக பட்ட பாவத்தை கோயிலில் போய்தானே தீர்க்கமுடியும் என மனதில் நினைத்தான் மாதவன்.

Sunday, January 30, 2011

உங்கள் மனைவியை அன்பாய் வைத்திருக்க வேண்டுமா?

நீங்கள் உங்கள் மனைவியை அன்பாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? இதோ உங்களுக்காக சில...

* நீங்கள் வேலைக்கு செல்பவராக இருந்தாலும் சரி, தொழில் செய்பவராக இருந்தாலும் சரி, 2-3 மணி நேரங்களை மனைவியுடன் பேசுவதற்கு மட்டுமே செலவிடுங்கள்.

* வீட்டிற்கு வந்த உடன் டி.வி.யும், ரிமோட்டுமாக இருந்து விட வேண்டாம். மனைவியை அழைத்து அன்று வீட்டில் நடந்த விடயங்களை பற்றிக் கேளுங்கள். அரட்டை அடித்துப் பேசுங்கள்.

* உங்கள் குடும்பத்துக்கு தேவையான நல்ல விஷயங்களை ஆரோக்கியமாக விவாதியுங்கள். இந்த விவாதத்தில் உங்கள் குடும்ப பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வு கிடைக்கலாம்.

* பூக்கள் பிடிக்காத பெண்களே இருக்க முடியாது. அடிக்கடி அந்த பூக்களை உங்கள் அன்பான மனைவிக்கு வாங்கிக்கொடுத்து அசத்துங்கள்.

* உங்கள் மனைவியை எப்போதும் காதலியாகவே நினையுங்கள். ஒரு காதலன் காதலியிடம் எப்படி அன்பாக நடந்து கொள்வானோ, அதே போன்று நீங்களும் நடந்து கொள்ளுங்கள். இல்லையென்றால், முயற்சியாவது செய்யுங்கள்.

* உன்னுடைய ஆசைகள் எல்லாவற்றையும் நான் நிறைவேற்றி விட்டேனா? நிறைவேறாத ஆசைகள் என்று எதாவது இருந்தால் சொல். அதை நான் நிறைவேற்றுகிறேன் என்று அவ்வப்போது மனைவியிடம் சொல்லிப்பாருங்கள். நீங்கள் இப்படி கேட்ட மாத்திரத்திலேயே உள்ளம் குளிர்ந்து போவாள் உங்களவள்.

* மனைவி கஷ்டப்பட்டு சில வேலைகளை செய்யும்போது, அதில் நீங்களும் பங்கெடுத்துப் பாருங்கள். அந்த நேரம், அவள் மனதிற்குள் ஆனந்த மழைச்சாரலே பொழியும்.

மொத்தத்தில், நீங்கள் மனைவியிடம் எந்த அளவுக்கு அன்பாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அவளும் உங்களிடம் அன்பாக இருப்பாள்

Tuesday, January 25, 2011

பொசசிவ்


பொசசிவ் என்ற போர்க்களம்..


ஆணா இருந்தாலும் சரி, பெண்ணா இருந்தாலும் சரி.. பொதுவா இந்த குணம் இல்லாத யாரையும் பாக்க முடியாது. சின்ன சின்ன விசயத்துல கூட நம்முடைய பொசசிவ் குணம் நம்மளையும் அறியாம வெளிப்படும். உதாரணத்துக்கு சின்ன குழந்தைங்க தங்களோட விளையாட்டுப் பொருட்கள அடுத்த சிறுவர்கள் எடுத்தா கோவப்பட்டு புடுங்கிடுவாங்க. அதுல கூட பொசசிவ் இருக்கு. அது தப்புனு சொல்ல முடியாது. மனிதர்களுக்கே இருக்குற இயற்கையான குணம் தான். ஆனா வாழ்க்கைல நாம எந்த சூழ்நிலைல எப்படி அந்த குணத்த வெளிப்படுத்துறோம்குறதுல தான் இருக்கு பிரச்சனை.

”நீ ஒரு பறவையை நேசிப்பது நிஜமெனில் அதை சுதந்திரமாய் பறக்க விடு.
அது உன்னை நேசிப்பது நிஜமெனில் உன்னிடமே திரும்பி வரும்”னு ஒரு கவிதை உண்டு.

இதை யாரும் செய்யலாம். ஆனா அந்தப் பறவை திரும்ப வருமானு யோசிச்சு அது என்ன பண்ணுதுனு கண்காணிச்சுகிட்டே இருக்குறவங்களும் இருக்காங்க..

நாம் நேசிப்பவர்கள் தன்னிடம் பேச வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. தன்னிடம் மட்டுமே பேச வேண்டும் என்று நினைப்பது தான் பொசசிவின் ஆரம்பம். (எங்கயோ கேட்ட மாதிரி இருக்கா?? கஜினி சூர்யா சொன்ன டைலாக்க கொஞ்சம் மாத்தி சொல்லிருக்கேங்க..)

அதிகமான அன்போட வெளிப்பாடு தான் பொசசிவ்னு சிலர் சொல்லலாம். இது வார்த்தைக்கு வேணும்னா அழகா தோணலாம். ஆனா அடிப்படைல யோசிச்சோம்னா ஒரு வித தாழ்வு மனப்பான்மையும் பொறாமையும் நம்பிக்கையின்மையும் கலந்த வெளிப்பாடு தான்னு தோணுது.

நாம ரொம்ப நேசிக்கிறவங்க வேற ஒருத்தர் கூட பேசும்போதும் பழகும்போதும் அந்த மூன்றாவது நபர் மேல ஒருவித கோபம் உண்டாகும். அவங்கள விட நாம எந்த விதத்துலயும் குறையா இல்லயேனு நமக்கு நாமே கேள்வி கேட்டுக்குவோம். அவங்களப் பத்தி பேச்செடுத்தாலே எரிஞ்சு விழுவோம். இது காதலர்களுக்கிடைல அதிகமா நடக்கும்.

தன் காதலி ஒரு பையன்கிட்டயோ, அல்லது காதலன் ஒரு பொண்ணுகிட்டயோ சாதாரணமாப் பேசுறத கூட அவங்க விரும்புறதில்ல.

அத விட.. அவங்க செல்போன்ல வெய்ட்டிங் கால் வந்துச்சுனா போதும்.. யார் கூட பேசிகிட்டு இருந்த? எதுக்கு பேசினனு கேட்டுக் கேட்டுக் கொன்னெடுத்துடுவாங்க.

இது ஆரம்ப நாட்கள்ல சாதாரணமான வாக்குவாதமா ஆரம்பிச்சு நாளாக நாளாக சந்தேகமா மாறுது. நமக்குப் பிடிச்சவங்க நம்மளுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்னு நெனக்கிறது தப்பில்ல. அதே சமயத்துல நம்மளோட விருப்பங்கள அவங்கமேல திணிக்கிறது தான் தவறு. இது அடுத்தவங்களோட சுதந்திரத்த பறிக்கிற மாதிரியான செயல் தான்.

காதலிலும் நட்பிலும் இந்த பொசசிவ் குணத்தின் சதவிகிதம் அதிகமாவே இருக்கு. இதுல ஆண் பெண்ணுங்குற பாகுபாடெல்லாம் இருக்குறதில்ல. இங்க பரஸ்பர புரிதல்ங்குறதே இல்லாம போய்டுது.

தனக்குத் தானே ஒரு வட்டத்தைப் போட்டுகிட்டு அடுத்தவங்களையும் அந்தக் கோட்டுக்குள்ளயே இருக்கணும்னு கட்டாயப்படுத்துறாங்க. இது ஒரு நிலைக்கு மேல வெறுப்பைத்தான் உண்டாக்குது.

அந்த மாதிரி சூழ்நிலை ஏற்படும்போது தான் ஒருத்தருக்குப் பிடிக்காத விசயத்த அவங்களுக்குத் தெரியாம மறச்சு செய்யணும்குற கட்டாயம் உண்டாகும். அதாவது நமக்கு ரொம்பப் பிடிச்சவங்க, நமக்குப் பிடிக்காதவங்க கூட பேசுறது நமக்குப் பிடிக்கலைனு சொல்லும்போது, நமக்குப் பிடிச்சவங்க, பிடிக்காத அந்த நபர் கூட நமக்குத் தெரியாம பேசுற சூழ்நிலை உருவாகும்னு சொல்றேன். (தெளிவாப் புரிஞ்சிருக்குமே..).

இன்னும் சொல்லப் போனா இந்தப் பொசசிவ் குணத்தால எந்த சந்தோசமும் நிம்மதியும் வந்துடப்போவதில்ல. மாறாக சண்டையும் மன அழுத்தமும் பிரிவும் தான் வரும்.

ஆனாலும் இந்தப் பிரச்சனைக்கு (நிரந்தரமான அல்லது தற்காலிகமான) பிரிவு மட்டுமே இதுக்கு சரியான தீர்வாகாது. சரியான புரிதலும் பரஸ்பர நம்பிக்கையும் இருந்தாலே போதும். குறிப்பா ஈகோ பாக்காம தங்களோட கோபங்கள தள்ளிவச்சுட்டு ஒருத்தருக்கொருத்தர் மனசு விட்டு வெளிப்படையா பேசினாலே பிரச்சனை தீர்ந்துடும்