Pages

Search This Blog

Sunday, January 30, 2011

உங்கள் மனைவியை அன்பாய் வைத்திருக்க வேண்டுமா?

நீங்கள் உங்கள் மனைவியை அன்பாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? இதோ உங்களுக்காக சில...

* நீங்கள் வேலைக்கு செல்பவராக இருந்தாலும் சரி, தொழில் செய்பவராக இருந்தாலும் சரி, 2-3 மணி நேரங்களை மனைவியுடன் பேசுவதற்கு மட்டுமே செலவிடுங்கள்.

* வீட்டிற்கு வந்த உடன் டி.வி.யும், ரிமோட்டுமாக இருந்து விட வேண்டாம். மனைவியை அழைத்து அன்று வீட்டில் நடந்த விடயங்களை பற்றிக் கேளுங்கள். அரட்டை அடித்துப் பேசுங்கள்.

* உங்கள் குடும்பத்துக்கு தேவையான நல்ல விஷயங்களை ஆரோக்கியமாக விவாதியுங்கள். இந்த விவாதத்தில் உங்கள் குடும்ப பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வு கிடைக்கலாம்.

* பூக்கள் பிடிக்காத பெண்களே இருக்க முடியாது. அடிக்கடி அந்த பூக்களை உங்கள் அன்பான மனைவிக்கு வாங்கிக்கொடுத்து அசத்துங்கள்.

* உங்கள் மனைவியை எப்போதும் காதலியாகவே நினையுங்கள். ஒரு காதலன் காதலியிடம் எப்படி அன்பாக நடந்து கொள்வானோ, அதே போன்று நீங்களும் நடந்து கொள்ளுங்கள். இல்லையென்றால், முயற்சியாவது செய்யுங்கள்.

* உன்னுடைய ஆசைகள் எல்லாவற்றையும் நான் நிறைவேற்றி விட்டேனா? நிறைவேறாத ஆசைகள் என்று எதாவது இருந்தால் சொல். அதை நான் நிறைவேற்றுகிறேன் என்று அவ்வப்போது மனைவியிடம் சொல்லிப்பாருங்கள். நீங்கள் இப்படி கேட்ட மாத்திரத்திலேயே உள்ளம் குளிர்ந்து போவாள் உங்களவள்.

* மனைவி கஷ்டப்பட்டு சில வேலைகளை செய்யும்போது, அதில் நீங்களும் பங்கெடுத்துப் பாருங்கள். அந்த நேரம், அவள் மனதிற்குள் ஆனந்த மழைச்சாரலே பொழியும்.

மொத்தத்தில், நீங்கள் மனைவியிடம் எந்த அளவுக்கு அன்பாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அவளும் உங்களிடம் அன்பாக இருப்பாள்

No comments: