Pages

Search This Blog

Thursday, September 1, 2011

மங்காத்தா அதிரடி ஆட்டம் – விமர்சனம்


Mankatha review

அஜித்தின் ஐம்பதாவது படம் தான் இந்த மங்காத்தா. தொடர் தோல்விகளால் ஒரு வெற்றியை கொடுத்தே தீர வேண்டிய சூழ்நிலை. அதற்காக வழக்கம் போல் இந்த படத்துல ஹீரோ ஊரையோ அல்லது நாட்டையோ காப்பாத்த கிளம்பல. பணம், பெண் என்று பித்து பிடித்து அலையும் ஒரு நெகடிவ் கதாபாத்திரம். “Strictly No Rules” என்று அஜித் வெற்றி பெறவேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் அனைத்து விதிகளையும் உடைத்து மங்காத்தா விளையாடி அதில் ஜெயித்தும் இருக்கிறார் வெங்கட் பிரபு.

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் சூதாட்டத்தில் ஈடுபடுத்தப்படும் ஐநூறு கோடி ருபாய் பணத்தை தன் வசாமாக்க திட்டம் போட்கிறார் ஜெயப்ரகாஷ். அதை கொள்ளை அடிக்க புறப்படுகிறது வைபவ், பிரேம் ஜி என்று நால்வர் கொண்ட கும்பல். இதை தெரிந்துக்கொண்டு அவர்களிடம் ஐந்தாவதாக சேர்கிறார் விநாயக் என்ற சஸ்பென்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரியான அஜித்.

அந்த ஐந்து பேரும் திட்டம் போட்டவாறு ஐநூறு கோடியையும் கொள்ளையடித்து விடுகின்றனர் ஆனால் அதை பங்கிட்டு கொள்வதில் தான் பிரச்சனை. பணத்தாசை காரணமாக அனைவரையும் கொன்று அதை ஒரே பங்காக சுருட்ட நினைக்கிறார் அஜித். ஆனால் பணம் அவருக்கே கிடைக்காமல் காணாமல் போகிறது. அதை தேடி தான் மீதி கதை.. இந்த கும்பலை தேடிபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக அர்ஜுன். கூடவே எதிர்பாராத க்ளைமாக்ஸ்.

“எவ்வளவு நாள் தான் நல்லவனாவே நடிக்கிறது”னு படத்தோட ட்ரைலர்லேயே கதையை சொல்லிட்டாங்க. அஜித் முதற்கொண்டு படத்தில் வரும் அனைவருமே கெட்டவர்கள் தான்.இவராவது நல்லவராக வராரேனு ஒருத்தரை நினைத்தால் அட அவரும் கடைசியில கெட்டவர் தான். அந்த ஐந்து பேரில் அஜீத்திற்கு மட்டும் முக்கியம் கொடுக்காமல் அவரும் அதில் ஒருவராகவே காண்பித்து கதையை நகர்த்தியது அருமை. அதே போல் பணம் காணாமல் போகும் போது அதை யார் எடுத்திருப்பார்கள் என்று அந்த கதாபாதிரங்களுக்கு எழும் குழப்பங்களும், கேள்விகளும் நமக்கும் எழாமல் இல்லை.

mankatha trisha lakshmi rai

அஜீத்தின் இது நாள் வரைய எல்லா படங்களையும் சில நொடிகள் ஒரே காட்சியில் ஓட விட்டு “அஜித் 50” என்று படம் தொடங்கும்போதே அதிரடி. விசில் பறக்கிறது. அடுத்த மே மாதம் வந்தால் தனக்கு நாற்பது வயது என்ற கூறி நரைத்த முடியுடன் இந்த படத்தில் அஜித் கொஞ்சம் அசத்தலாக வருகிறார். முதல் பாதியில் தனியாக செஸ் விளையாடி கதையை நரெட் செய்யும்போது பின் பாதியில் பணத்தின் மேல் தனக்கு உள்ள பைத்தியத்தை வெளிபடுத்தும் காட்சிகளிலும் மிகச்சிறந்த பர்பார்மென்ஸ்.

இந்த படத்துக்கு அஜித் வாய்க்குள்ளேயே சென்சார் போர்டு உறுப்பினர்கள் ஒக்காந்து இருந்தாங்க போல. அவர் வாயை திறந்தார்னாலே வெறும் பீப்… பீப்.. சத்தம் தான். அவ்வளவு மோசமான கெட்ட வார்த்தைகள். உதட்டசைவில் அதை புரிந்து கொள்கிறவர்கள் கைதட்டி ஆற்பரிக்கிரார்கள். புரியாதவர்கள் எரிச்சலுடன் முழிக்கிறார்கள். படத்தில் திரிஷா, ஆண்ட்ரியா மற்றும் அஞ்சலி இருந்தும் படத்திற்கு தேவை இல்லாத கதாபாத்திரங்கள். ஆனால் லட்சுமிராய் கொஞ்சம் பயன்ப்பட்டு இருக்கிறார்.

அஜித் திரிஷா காதலே இந்த கதைக்கு தேவையில்லாத போது அவர் அதற்கு அழுவதும், ஒரு சோக பாட்டும் நம் பொறுமையை சோதிக்கிறது. சோக பாடல் ஆரமித்தபோது எங்கே இன்னும் யுவன் சங்கர் ராஜாவை காணோமே என்று யோசிக்க ஆரமித்த போது கரெக்டாக வந்து அட்டென்டன்ஸ் போட்டு விட்டார். ஆனால் இரண்டு குத்து பாடல்களை தவிர வேறு ஏதும் இதில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. வழக்கம் போல் பின்னனி இசை கலக்கல்.

ajith-premji-vaibhav-veer-mankatha-still

வெங்கட் பிரபுவின் படத்தில் வழக்கம் போல் வரும் அத்தனை சகாக்களும் இந்த படத்திலும். இளைஞர்களை டார்கெட் செய்யும் வசனங்கள் மூலம் நிறைய காட்சிகளில் கைதட்டல்கள் பெறுகிறார். ஒரு பாடலில், அஜித் மற்றும் த்ரிஷா நடனமாட, வீட்டின் உட்புறங்கள் தொடர்ந்து மாறிக்கொண்டே வருவது மிகவும் புதுமையான, ரசிக்கும்படியான முயற்சி. வழக்கம் போல் பிரேம்ஜி இந்த படத்திலும் மற்ற திரைப்படங்களின் வசனம் பேசியே வருகிறார். அவ்வப்போது எரிச்சல் ஊட்டினாலும் பல இடங்களில் டைமிங் வசனத்தால் சிரிக்க வைக்கிறார். உதரணமாக “மனுஷன் கண்டு புடிச்சதுல உருப்படியானது ரெண்டே ரெண்டு தான்.. ஒன்னு சரக்கு… இன்னொன்னு முறுக்கு.” என்று சொல்லும்போது அரங்கமே கைதட்டலில் அதிர்கிறது.

படம் முடிந்து என்டு கார்டு ஓடும்போது அஜித் செய்யும் லூட்டிகள் கொஞ்ச நஞ்சமில்லை. அதில் தனியாக ஒரு நகைச்சுவை குறும்படம் பார்த்த அனுபவம் இருந்தது. மொத்தத்தில் இது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு ஜாலியான பொழுதுபோக்கு படம். அஜித் ரசிகர்களுக்கு இது நிச்சயம் கொண்டாட வேண்டிய பட

No comments: